பிரம்மாண்டத்தின் உச்சம்! சென்னையில் அரசு களமிறக்கிய ராட்சச மெஷின்! 2 அடுக்கா? மெட்ரோ பயணிகள் குஷி
சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. இதில் இரண்டு அடுக்கு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னையில் மெட்ரோ பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. 2ம் கட்ட கட்டுமான பணிகள் தற்போது நடைபெற தொடங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ள நிலையில் போக்குவரத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. முக்கியமான ஓஎம்ஆர் சாலையில் இருந்த 4 டோல்கேட்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளது.
மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் மாற்றப்பட்டு உள்ளன. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை x 80 அடி சாலை வரை நடைபெற இருப்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது.
118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது.
முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
உயர் மட்ட பாதை மற்றும் சுரங்கப்பாதை இரண்டும் அமைக்கப்பட உள்ளன,
சுரங்கப்பாதை: மொத்தம் 40 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே நீண்ட வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலும் நீண்ட வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
இரண்டு அடுக்கு: இந்த முறை மெட்ரோவில் புதிய மாற்றம் ஒன்றும் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த முறை இரண்டு அடுக்கு பாலம் கட்டப்பட உள்ளது.
வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் இரண்டு அடுக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது.
ஆலப்பாக்கம், காரப்பாக்கம் பகுதிகளிலும் இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது.
போரூர் சந்திப்பு பகுதியிலும் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
அதாவது ஒரு பக்கம் செல்லும் மெட்ரோ கீழேயும்.. இன்னொரு பக்க்கம் செல்லும் மெட்ரோ மேலேயும் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

சீன பொருட்கள்: மொத்தமாக 5 கிமீ தொலைவிற்கு இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ராட்சச இயந்திரங்கள் சீனாவில் இருந்து ஸ்பெஷலாக களமிறக்கப்பட்டு உள்ளன.
இந்த ராட்சச இயந்திரங்கள் மூலம் ராட்சச தூண்கள் அமைக்கப்பட்டு, 140 மீட்டர் உயரம், 22 மீட்டர் நீளத்தில் பிரம்மாண்டமாக மெட்ரோ நிலையங்கள் அமைய உள்ளன.
இதற்காக கிர்டர் லாஞ்சர் வகை மெட்ரோ இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதை வைத்தே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும்.
ஒரு பாலம் கீழேயும். அதில் இருந்து 15 அடிகளுக்கு மேலே இன்னொரு பாலமும் அமைக்கப்படும். இதனால் சென்னையின் மொத்த தோற்றமே மாறப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இயந்திரத்தின் எடை மட்டும் 500 டன் ஆகும். இதை கோர்க்கவே அடுத்த 4 மாதங்கள் ஆகும் என்பதால் அந்த பணிகள் முடிந்து இரண்டு அடுக்கு பாலங்கள் கட்டப்படும்.












Click it and Unblock the Notifications