இதெல்லாம் வேற லெவல் திட்டம்.. நியூயார்க் போல மாறும் சென்னை.. வரப்போகும் மாஸ் வசதி.. குட் நியூஸ்!
சென்னை: கிரேட்டர் சென்னை மாநகராட்சி தனது வணிக வளாகங்களில் 10 மாடி மல்டி லெவல் பார்க்கிங் பகுதிகளை பல்வேறு இடங்களை உருவாக்க உள்ளனர்.
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சென்னையில் முக்கிய சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சென்னையில் முக்கிய சாலைகள் பல்வேறு மாற்றங்களை பெற உள்ளன. சாலைகளை அகலப்படுத்துவது, புதிய புட் கோர்ட்டுகளை உருவாக்குவது, சாலை ஓரம் புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்குவது போன்ற பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர்.

சென்னையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். அதேபோல் துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி சாலை, கத்தீட்ரல் சாலை ஆகிய சாலைகளில் இந்த மாற்றங்கள் செய்யப்படும். அதன்பின் எலியடஸ் கடற்கரை சாலை, காமராஜர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளிலும் இந்த மாற்றம் செய்யப்படும். இப்படி மொத்தம் 18 சாலைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக உயர் அடுக்கு கட்டிடங்கள் கட்ட அனுமதி, புதிய சாலைகள், போஸ்டர் ஒட்ட தடை, கூடுதல் பாலங்கள் என்று சிங்கார சென்னை 2.0 திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல பூங்காக்கள் கூட இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன.
பார்க்கிங்: இந்த நிலையில் சென்னையில் பார்க்கிங் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக கிரேட்டர் சென்னை மாநகராட்சி தனது வணிக வளாகங்களில் 10 மாடி மல்டி லெவல் பார்க்கிங் பகுதிகளை பல்வேறு இடங்களை உருவாக்க உள்ளனர். ஆர்.ஏ.புரம் 3வது குறுக்குத் தெரு, சி.பி.ராமசாமி சாலை, தியாகராய சாலை, கோடம்பாக்கத்தில் உள்ள என்.எஸ்.கே.சாலை ஆகிய இடங்களில் முதற்கட்டமாக ₹162 கோடியில் அமைக்கப்படும். இரண்டாம் கட்டமாக மீதமுள்ள இடங்களில் பார்க்கிங் அமைப்பது தொடர்பான திட்டத்திற்கு மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஜோன்ஸ் லாங் லாசால் பிராபர்ட்டி ஆலோசகர்கள் மற்றும் CBRE சவுத் ஏசியா பிரைவேட் லிமிடெட் உடன் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. நிலம், சாலை இணைப்பு, போக்குவரத்து மற்றும் பொருளாதார செலவு பற்றிய விரிவான அறிக்கைக்காக இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக 600 இடங்களில் நான்கு சக்கர வாகன பார்க்கிங் உருவாக்கப்படும். அதே வேளையில், விரிவாக்கத்திற்குப் பிறகு 2,000 க்கும் மேற்பட்ட இடங்கள் பார்க்கிங் செய்வதற்காக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தி நகரில் முன்பு 40 கோடியில் கட்டப்பட்ட மல்டி லெவல் பார்க்கிங் ஸ்லாட்டில் 222 கார் ஸ்லாட்டுகள் இருந்தன, ஆனால் விரைவில் செயலிழந்தன. அது போல இல்லாமல் இந்த முறை தொடர்ந்து இயங்க கூடிய பார்க்கிங்குகள் அமைக்கப்படும் , என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications