சென்னையில் வருது பிரம்மாண்ட மால்.. எந்த ஏரியாவில் வருகிறது என்று தெரிந்தால்.. ஆடிப்போய்டுவீங்க
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான மால்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு முக்கியமான மால் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெரம்பூர் எஸ்பிஆர் சிட்டியில் உள்ள மால் ஆஃப் மெட்ராஸ் அமைக்கப்பட உள்ளது. 1.2 மில்லியன் சதுர அடியில் இந்த மால் அமைக்கப்பட உள்ளது. 5 மாடிகள் கொண்ட இந்த மாலில் 300 கடைகள் அமைக்கப்பட உள்ளன.

12 ஆங்கர் கடைகள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் மொத்தமாக 9 திரை கொண்ட PVR மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட உள்ளன. 2 ஏக்கர் சென்ட்ரல் பிளாசா மார்க்கெட்டிங் & விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல் 3 நிலைகள் கொண்ட 1500 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான கட்டுமானம் தற்போது தொடங்கி உள்ளது. ஏற்கனவே சென்னை அசோக் நகரில் பெரிய மால் வர உள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் மிகப்பெரிய 22 அடுக்கு மாடி கட்டப்பட்டு வருகிறது . இடையில் நிறுத்தப்பட்டு இருந்த கட்டுமானம் மீண்டும் தொடங்கி உள்ளது. வேகமாக சென்று வரும் கட்டுமானம் தற்போது 17 மாடிகளை கடந்து கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னையின் இந்த பகுதியில் பிரம்மாண்ட மால் வர உள்ளது. இதை யார் கட்டுகிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகிடுவீர்கள். தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்தில் தற்போது 10 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. ட்வின் டவர் என்பதால் இன்னொரு டவரும் உடன் கட்டப்பட உள்ளது. மீதம் உள்ள மாடிகளின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது. இங்கே மால் வருவதால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது. இந்த நிலையில்தான் சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கே வரப்போகும் புதிய மிகப்பெரிய திட்டம் பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
உதயம் தியேட்டர்: பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னையில் பல முக்கிய பழைய ஹோட்டல்கள், இடங்கள் வாங்கப்பட்டு உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் தற்போது உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் தற்போது அங்கே ஓடும் கர்ணன் உள்ளிட்ட பழைய படங்கள் விரைவில் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications