சென்னையில் வீட்டு கிச்சனுக்கு வரும் கேஸ்.. பைப் மூலம் வழங்கும் தமிழ்நாடு அரசு.. புக்கிங் தொடங்கியது
சென்னை: உங்கள் வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலம் எரிவாயு இணைப்புகளைப் பெற முடியும் என்று சொன்னால்.. கேட்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா.. சென்னையில் அது வெகுவிரைவில் நிஜமாக போகிறது. சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான ரெஜிஸ்டிரேஷன் தொடங்கி உள்ளது. இதுவரை 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா ₹ 576 செலுத்தி PNGக்கு பதிவு செய்துள்ளன.
இந்த வருட இறுதிக்குள் சென்னையில் இது விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்கான பணிகள் சென்னையில் உள்ள குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள வீடுகளுக்கு PNG அல்லது பைபர் இயற்கை எரிவாயு எனப்படும் பைப் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு வழங்குவதற்கு தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.

எண்ணூரில் உள்ள சிஎன்ஜி அல்லது சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையத்தில் இருந்து பைப்லைன்கள் அமைப்பதற்கான அனுமதிகளை ஏற்கனவே சாலை போக்குவரத்து துறையிடம் வாங்கி உள்ளனர்.
சென்னையில் பிஎன்ஜியின் முதல் வாடிக்கையாளர்களாக திருமங்கலம் அருகே உள்ள மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பாக இருக்கும் எனத் தகவல்கள் வருகின்றன. சிஎன்ஜி திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட தொழில் துறை பெரிய உதவிகளை வழங்கி வருவதாகவும் மேலும் ஒரு நோடல் ஏஜென்சியும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையிலும், திருவள்ளூரிலும் சுமார் 666 கி.மீ தூரத்துக்கு தனியார் நிறுவனம் மூலம் பாதைகள் அமைக்கப்படும் என்றும் எண்ணெய் துறையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தண்ணீர், கழிவுநீர், மின்சாரம், இன்டர்நெட், தொலைபேசி இணைப்புகள் போன்ற முக்கியப் பாதைகள் சென்னை நகரச் சாலைகளின் கீழ் இயங்குவதால் இந்த பணிகள் மிகவும் கடினமான இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றன.
அடுத்த 4 ஆண்டுகளில், சென்னை மற்றும் திருவள்ளூரில் சுமார் 33 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு PNG இணைப்புகள் வழங்கப்படும். மெயின் லைன் மணலி வழியாக ஜவஹர்லால் சாலை வழியாகச் சென்று, மாதவரம் வட்டம் கத்திப்பாராவை அடைந்து பின்னர் மீனம்பாக்கம் வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு இடங்களில் கிளை வழிகள் வழியாக இதற்கான சாலைகள் அமைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
PNG இணைப்புகள் LPG ரெட்டிகுலேட்டட் இணைப்புகளில் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கும். மின்சாரம் போல வீடுகளில் ரெகுலேட்டரை திருகினால் கேஸ் கிடைக்கும். இதற்கு மீட்டர் பொருத்தப்பட்டு அதன் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த சேவைகளில் சிலிண்டர்கள் இருக்காது. ஆரம்ப புக்கிங் கட்டணத்தை வசூலித்த பிறகு நிறுவனம் 90 நாட்களுக்குள் PNG இணைப்புகளை வழங்கும்.. PNG அடுப்புகளுக்கு பெரிய முனைகளுடன் கூடிய பெரிய விட்டம் கொண்ட பர்னர்கள் தேவைப்படும். இப்போது நுகர்வோர் PNG இணக்கமான அடுப்புகளுக்கு மாற (பெட்ரோலியம் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கத்தால்) வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்போது உள்ள சிறிய அடுப்புகள் பலன் அளிக்காது.
ஏற்கனவே சென்னை மற்றும் திருவள்ளூரில் அமைக்கப்பட்டுள்ள 222 சிஎன்ஜி விற்பனை நிலையங்களில் 70 செயல்பட ஆரம்பித்து, தினமும் சுமார் 6800 வாகனங்களுக்கு சுமார் 10000 கிலோ சிஎன்ஜி சப்ளை செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான ரெஜிஸ்டிரேஷன் தொடங்கி உள்ளது. இதுவரை 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா ₹ 576 செலுத்தி PNGக்கு பதிவு செய்துள்ளன. இதற்கான பைப்லைன் அமைக்கும் பணி தொடங்கும் போது, அதிகமான குடியிருப்பாளர்கள் பதிவு செய்வார்கள் என குடியிருப்போர் நலச் சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது, கேளம்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள எல்சிஎன்ஜி நிலையம் ஆகிய இடங்களில் உள்ள டிசி யூனிட்கள் மூலம் எரிவாயு வழங்கப்படுகிறது. நிறுவனம் குழாய் பதிப்பதில் அதிக முன்னேற்றம் அடைந்தவுடன், இணைப்புகளை வழங்குவது வேகமாக இருக்கும். அதேபோல் துணை கேஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு கேஸ் வேகமாக, எளிதாக வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications