இனி சென்னையில் வெள்ள பாதிப்பு வராது? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தங்கம் தென்னரசு
சென்னை: ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் சென்னையில் வெள்ளம் வருவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இதனை தவிர்க்க ரூ.88 கோடியில் 7 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.
இதன் மூலம் சென்னைக்கு வெள்ள பாதிப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பிரச்சனைக்கு இந்த பூங்காக்கள் மூலம் தீர்வு எட்டப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டால் சென்னை மக்களுக்கு வெள்ள பயம் பிடித்துக்கொள்ளும். ஏறத்தாழ எல்லா கார்களும் மேம்பாலங்களில் பார்க் செய்யப்படும். தாழ்வான வீடுகளில் வெள்ளம் தேங்கும் என்பதால் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவை கட்டில் மேல் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். இந்த வெள்ள பிரச்சனைக்கு எப்போதுதான் தீர்வு எட்டப்படும்? என்று சென்னை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்தனர்.
அதிகரிக்கும் மக்கள் தொகை, அதற்கேற்ப உயரும் கட்டுமானங்கள், குப்பை கழிவுகள் ஆகியவை மழைநீர் வடிகாலுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. இதனை சரி செய்வதை காட்டிலும், நீர் தேங்குவதற்கு ஏற்ப குளங்களையும், இதர நீர் தேக்கங்களையும் அமைப்பதுதான் மழைநீர் வடிகாலுக்கு சிறந்த தீர்வு என்று முன்மொழியப்பட்டது. இதனையடுத்து கிண்டியில் 2 குளங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை, இந்த குளத்தில் வடிந்து வந்தது.
இதனால் கிண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, இதே போன்று புதிய நீர் நிலைகளை உருவாக்க தமிழக அரசு யோசித்து வந்தது. இதன் அடிப்படையில்தான் தற்போது 7 மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 இடங்களில் இந்த பூங்காக்கள் அமைக்கப்படும். இது மழைநீர் வடிகாலாக செயல்பட்டு வெள்ள பாதிப்பை தடுக்கும்.
எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் சென்னைக்கு வெள்ள பாதிப்பு குறையும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பை சூழலியலாளர்களும் வரவேற்றிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications