விஜயின் தவெகவிற்கு ஆதரவு எங்கு அதிகம்? சென்னை, கோவை டூ நெல்லை வரை.. சத்தியம் டிவி சர்வே முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 5 நகரங்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு எவ்வளவு பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது பற்றிய சத்தியம் டிவி கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். 2026ல் தமிழகத்தில் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடிகர் விஜய் வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளார்.

vijay tvk

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் அக்டோபர் 27 ம் தேதி முதல் அரசியல் மாநாடு நடந்தது. இதில் பல லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிலையில் தான் நடிகர் விஜயின் அரசியல் வருகையால் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் விஜயின் கட்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? என்பது பற்றி சத்தியம் டிவி சார்பில் மெகா சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 தொடங்கிய சர்வே 21 நாட்கள் நடந்தது. இந்த சர்வேயை பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என்று 110 பேர் மேற்கொண்டனர். அனைத்து தரப்பு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது.

இந்த சர்வே முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த கருத்து கணிப்பில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய 5 நகரங்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலை என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சென்னையில் ஆண்களை பொறுத்தவரை 36 சதவீதம் பேர் விஜயின் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 25 சதவீதம் பேர் எதிர்ப்பும், 39 சதவீதம் பேர் கருத்தில்லை என்றும் கூறியுள்ளனர். பெண்களை எடுத்து கொண்டால் 25 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 15 சதவீதம் பேர் எதிர்ப்பும், 60 சதவீதம் பேர் கருத்தில்லை என்றும் கூறியுள்ளனர்.

திருச்சியை எடுத்து கொண்டால் ஆண்களில் 30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 52 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்காத நிலையில் 18 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களில் 66 சதவீதம் பேர் கருத்து இல்லை என்று கூறிய நிலையில் 24 சதவீதம் பேர் ஆதரவாகவும், 10 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

கோவையை பொறுத்தவரை ஆண்களில் 32 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 41 பேர் கருத்தில்லை என்றும், 27 சதவீதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். பெண்களை எடுத்து கொண்டால் 26 சதவீதம் பேர் ஆதரவும், 21 சதவீதம் பேர் எதிர்ப்பும், 53 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்.

மதுரையில் விஜயின் தவெகவிற்கு ஆண்களை எடுத்து கொண்டால் 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, 43 பேர் கருத்து தெரிவிக்கவில்லை. பெண்களை எடுத்து கொண்டால் 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 41 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, 38 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.

நெல்லையை எடுத்து கொண்டால் ஆண்களில் 29 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 21 சதவீதம் பேர் எதிர்ப்பும், கருத்து இல்லை என்று 50 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். பெண்களை பொறுத்தவரை 32 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 14 சதவீதம் பேர் எதிர்ப்பும், 54 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+