Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இன்று இரவு வானத்தில் நடக்கும் அதிசயம்! வெறும் கண்களால் பார்க்கலாம்.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரவு வானத்தில் எப்போதாவது ஒரு முறை அதிசயங்கள் நடக்கும். அந்த வகையில், நேற்று வெள்ளி, நிலவு மற்றும் சனி ஆகிய கிரகங்ள் ஒரே நேர்க்கோட்டில் தெரிந்திருக்கின்றன. வாய்ப்பிருந்தால் இன்றும் இதனை நம்மால் சென்னையில் இருந்து பார்க்க முடியும்.

வானியல் அதிசயம்: பூமியிலிருந்து சுமார் 10.6 கோடி கி.மீ தூரத்தில் வெள்ளி கிரகம் இருக்கிறது. சூரிய குடும்பத்தின் மிகவும் பிரகாசமாக இருக்கும் இந்த கிரகமும், பூமியிலிருந்து ஏறத்தாழ 3.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவும், 151 கோடி கி.மீ தொலைவில் உள்ள சனி கிரகமும் நேற்று ஒரே நேர்க்கோட்டில் வந்திருக்கிறது. 2.2 டிகிரிதான் மூன்று கோள்களுக்கும் இடைவெளி இருந்திருக்கிறது. இது ஒரு வானியல் அதிசயமாகும். சில ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்று நிகழும்.

chennai space stars moon

இன்றும் தொடரும் அதிசயம்: வானிலை சரியாக இருந்தால் இன்றும் கூட இந்த வானியல் அதிசயத்தை பார்க்க முடியும். ஆனால், நேர்க்கோட்டில் இல்லாமல் கிரகங்கள் கொஞ்சம் விலகி இருக்கும். ஆனால் மூன்று கிரகங்களையும் ஏறத்தாழ நேர்க்கோட்டில் பார்க்க முடியும். இதேபோல ஜன.16-17ம் தேதிகளில் வெள்ளி மற்றும் சனி கிரகம் நெருக்கமாக இருப்பதை பார்க்க முடியும். ஆனால் நிலவை இத்துடன் சேர்ந்து பார்க்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சென்னையிலிருந்து தெரியுமா?: ஒளி மாசு குறைவாக உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த அதிசயத்தை பார்க்க முடியும். தமிழ்நாட்டில் இருந்து கூட பார்க்க முடியும். நீங்கள் சென்னையில் இருந்தாலும் இது உங்கள் கண்களுக்கு தெரியும். மேற்கு வானில் நிலவுக்கு கீழே மங்கலாக ஒரு நட்சத்திரம் தெரியும். அதுதான் சனி கிரகம். அதை தொடர்ந்து பிரகாசமாக ஒரு நட்சத்திரம் தெரியும் அதுதான் வெள்ளி கிரகம்.

ஆனால், தெளிவாக பார்க்க வேண்டும் எனில், ஒளி மாசு குறைந்த பகுதிக்கு போக வேண்டும். அதாவது, வேலூர் மாவட்டத்தில் உள்ள வைணு பாப்பு வானியல் ஆய்வகத்தின் அருகில் இதை தெளிவாக பார்க்க முடியும். இது தற்போது திருப்பத்தூரில் இருக்கிறது.

வெறும் கண்களால் பார்க்கலாமா?: ஆம் இந்த நிகழ்வை வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். தொலை நோக்கி, பைனாகுலார் உள்ளிட்டவை இருந்தால் இதனை இன்னும் சிறப்பாக பார்த்து ரசிக்க முடியும். ஆனால் அவை இல்லாமலேயே கூட இதை சிறப்பாக பார்க்க முடியும். சூரியன் மறைந்த பின்னர், 2 மணி நேரம் கழித்து இதை பார்க்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது சரியாக இரவு 8 மணி முதல் 8.30 வரை இதை பார்த்து ரசிக்க முடியும்.

வானியல் ஆய்வுகள்: சர்வதேச அளவில் வானிலை ஆய்வுகளில் நாம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறோம். மற்ற நாடுகள் எல்லாம் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரோ அமைப்பு குறைந்த செலவில் பல ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே சர்வதேச அளவில் இந்திய விண்வெளி ஆய்வுக்கு என தனி மதிப்பு இருக்கிறது. இதனை பயன்படுத்தி குழந்தைகளை விண்வெளி ஆய்வு துறை நோக்கி நம்மால் நகர்த்த முடியும். இதற்கு வானியல் அதிசயங்கள் உந்து சக்தியாக இருக்கின்றன.

இந்த ஆண்டுக்கான வானியல் நிகழ்வுகள்: சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் இந்த ஆண்டு நடைபெற இருக்கின்றன. இது தவிர விண்கற்கள் மழை, மற்ற சில கிரகங்களை சேர்த்து ஒன்றாக பார்ப்பது என பல வானியல் நிகழ்வுகள் இந்த ஆண்டு நடக்க இருக்கின்றன. எனவே மிஸ் பண்ணாம எல்லாத்தையும் பாருங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+