பெங்களூரை விட.. அதிகமாக கடன் வாங்கும் சென்னை மக்கள்! ஆய்வில் வெளியான ஷாக் தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சமீப காலமாக பொருளாதார ரீதியில் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வில் பெங்களூரை விட சென்னை மக்கள்தான் அதிகம் கடன் வாங்குவதாக தெரிய வந்திருக்கிறது.

பிஆர்ஐசிஇ-டாடா நடத்திய ஆய்வில்தான் இது தெரிய வந்திருக்கிறது. ஆய்வில் நாட்டின் முக்கிய பெருநகரங்களான மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் ஆகியவை ஒப்பிடப்பட்டிருக்கின்றன.

Chennai

இந்த ஆய்வில், பிற பெருநகரங்களை விட சென்னை மக்கள் தங்களின் வருமான வரம்பை தாண்டி சொத்துக்கள் வாங்குவதற்காக மிக அதிள அளவில் கடன் வாங்குவதில் முதலிடத்தில் உள்ளனர். சென்னையில் உள்ள மொத்த குடும்பங்களில் 27.7% குடும்பங்கள் பெரும் கடன் சுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். சொந்த வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காகவே பெரும்பகுதி கடன் பயன்படுத்தப்படுகிறது.

மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது.. சென்னையில் வீட்டு வாடகையும், ரியல் எஸ்டேட் விலையும் எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கின்றன. எனவே இங்குள்ள மக்கள் சொத்துக்களை வாங்க அதிக கடன் வாங்குகிறார்கள்.

வீடு மற்றும் வாகன கடன் விகிதத்தில் சென்னை 27.7% ஆக இருக்கிறது. ஹைதராபாத், பெங்களூரை எடுத்துக்கொண்டால்.. அவர்கள் நிறைய சம்பாதித்தாலும் 14-15% தான் கடன் வாங்குகிறார்கள். அவர்களிடம் ஏற்கெனவே நிறைய சொத்துக்கள் இருப்பதால் கடன் வாங்குவது குறைவாக இருக்கலாம்.

மறுபுறம் நாட்டிலேயே பெங்களூர் நகர மக்கள்தான் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதேநேரம் இவர்கள் அதிக அளவில் சேமித்தும் வைக்கிறார்கள். சத்தீஷ்கர் மக்கள் அதிகமாக செலவிடுகிறார்கள் என்றும், டெல்லி மிகப்பெரிய சந்தைக்கான நகரமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. டெல்லி மக்கள் தாங்கள் சம்பாதிப்பதை விட குறைவாகவே செலவு செய்கிறார்கள். மறுபுறம் மும்பைதான் அதிகம் பணம் புழங்கும் சிட்டியாக இருக்கிறது. இங்குதான் அதிக அளவில் பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சமீப காலமாக பொருளாதார ரீதியில் பெரிய அளவில் வளர்ந்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு ஒன்று விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆய்வில் பெங்களூரை விட சென்னை மக்கள்தான் அதிகம் கடன் வாங்குவதாக தெரிய வந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+