திணறும் சென்னை புறநகர்.. சிங்கபெருமாள் கோவில் அருகே 2 கி.மீ. தூரத்திற்கு உச்சத்தில் டிராபிக் நெரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் சதுர்த்தி காரணமாக தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னையின் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பு சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையாக அமைந்ததால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப போதிய பேருந்து வசதி இல்லை என சர்ச்சை எழுந்திருந்தது தனிக்கதை!

Chennai Traffic

டிராபிக்

இதற்கிடையே தற்போது விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், அவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை நோக்கி வரும் பிரதான சாலைகளில் டிராபிக் அதிகரித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் வழியாக சென்னை நோக்கி வரும் ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. நேரம் செல்ல செல்ல வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 11 மற்றும் 12ஆம் தேதிகளில் மட்டும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் சுமார் 2.31 லட்சம் பேர் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். விடுமுறை முடிந்துள்ள நிலையில், இவர்களில் பெரும்பாலானோர் தற்போது சென்னை திரும்பி வருகின்றனர்.

இதையடுத்து சென்னை திரும்பும் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க செப்டம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 3,565 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது. விடுமுறைக்கு செல்லும்போதே போதிய பேருந்துகள் இல்லை என விமர்சனங்கள் இருந்த நிலையில், அதை கணக்கில் வைத்தே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கவனம்!

தொடர் விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால், இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை வழியாக சென்னை வரும் வாகன ஓட்டிகள், சிங்கபெருமாள் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் டிராபிக் அதிகரிக்கும் சூழல் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+