வாகன ஓட்டிகளே கவனம்! சென்னையில் இந்த இரு முக்கிய சாலைகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த டிராபிக் போலீசார் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை டிராபிக் குறைக்க சென்னை போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி போக்குவரத்தைக் குறைக்கச் சோதனையில் முயற்சியில் அண்ணா சாலை மற்றும் மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

அண்ணா சாலை
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஏற்கெனவே அண்ணாசாலை - டேம்ஸ் சாலை சந்திப்பு ஒரு வழிப்பாதையாகவும், அண்ணாசாலை - திரு.வி.க சந்திப்பு ஒரு வழிப்பாதையாகவும் மாற்றம் செய்யப்பட்டது, வாகன ஓட்டிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அண்ணாசாலை - சுமித் சாலை சந்திப்பில் சோதனை முயற்சியாக ஜூன் 4-ஆம் தேதி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

காலை மற்றும் மாலை நேரங்கள்
இதன்படி, காலை மற்றும் மாலை வாகன நெரிசல் அதிகமான நேரங்களில் ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் ஸ்மித் சாலை சந்திப்பில் மேலும் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஸ்பென்சர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம். டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைய அனுமதிக்கப்படும்.

ஸ்பென்சரில் இருந்து வரும் வாகனங்கள்
ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பட்டுலாஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்மித் சாலைக்கு சற்று முன்பாக உள்ள ரேமன்ட்ஸ் துணிக் கடை எதிரே 'யு' திருப்பம் செய்து ஸ்பென்சர் சந்திப்பு நோக்கிச் செல்லலாம். மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்தினால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இதனால் அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லலாம்.

மத்திய கைலாஷ்:
பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு , அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் ஜூன் 4-ஆம் தேதி அமல்படுத்தப்படுகிறது.

பழைய மாமல்லபுரம் சாலை
இதன்படி, அன்று முதல் பழைய மாமல்லபுரம் சாலை இந்திரா நகர் சந்திப்பு வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள், ராஜீவ்காந்தி சாலை வழியாக (மத்திய கைலாஷ் பின்புறம்) இடதுபுறம் திரும்பி, சர்தார் பட்டேல் சாலையைச் சென்று காந்தி மண்டபம் மேம்பாலத்தின் கீழ் 'யு' திருப்பத்தில் திரும்பி மீண்டும் சர்தார் பட்டேல் சாலை வழியாக சி.பி.டி சந்திப்பை அடையலாம். அங்கிருந்து அவரவர் இலக்கை அடையலாம் அல்லது பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்திரா நகர் சிக்னலில் வலது புறம் திரும்பி இந்திரா நகர் 2-ஆவது அவென்யூ (வாட்டா் டேங்க் சாலை) இந்திரா நகர் 1-ஆவது அவென்யூ சந்திப்பு வழியாக எல்.பி.சாலையை அடையலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications