ஆன்லைனில் தேடிவரும் ஆப்பு.. சிக்னலை தாண்டிய அத்தனை பேருக்கும் அபராதம்.. அதிரவைத்த சென்னை போலீஸ்
சென்னை: ஆன்லைன் மயமான பிறகு ஆப்பும்.. ஆன்லைனிலேயே தேடி வருகிறது. சென்னை புரசைவாக்கத்தில் சிக்னலில் ஸ்டாப் லைனை தாண்டிய அத்தனை பேருக்கும் ஆன்லைனிலேயே அபராதம் விதித்து அதிரவைத்துள்ளது சென்னை போக்குவரத்து போலீஸ்.
முன்பெல்லாம் ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லை என்றால் யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடுவதும் இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். இதுதான் சென்னையில் முன்பு கள எதார்த்தம்.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள். இப்படித்தான் சென்னையில் நீண்ட காலமாக இருந்தது.
ஆனால் சென்னை போக்குவரத்து போலீசார் கடந்த 4 மாதங்களாக எடுத்த அதிரடி ஆக்சனால் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு பயப்படும் நிலை வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என சென்னையில் பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தினசரி நடப்பது, இதுதவிர சென்னையை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞயிறுகளில் குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். வாகனங்களில் வந்து தான் மது வாங்குவார்கள், அங்கேயே அருந்துவார்கள். அருந்திவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வார்கள். ஆனால் என்ன ஒரு சிக்கல் என்றாலும் வார இறுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்துவார்கள். எனவே ஒருவேளை போலீசிடம் மாட்டினால் அன்றே அவர்கள் வண்டிக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இது சென்னையில் சர்வ சாதாரணமாக தற்போது வார இறுதிகளில் நடக்கிறது.
போக்குவரத்து போலீசாரின் சோதனையில் மட்டுமல்ல.. பொதுமக்களின் சோதனையில் நடந்திருக்கிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்தால் உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Your tweet was verified and action taken.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) July 17, 2023
TN01AY1705
TN09CW3115
TN05AZ1719
TN01AX3751
TN06T7762#StopLineDiscipline #TrafficSignal #helmet #NoHonking #DoNotDrinkAndDrive #NeverOffDuty #InPublicService #YourSafetyOurPriority pic.twitter.com/gp31gjog6H
இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள்.அப்படி அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். போலீஸ் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரும் சிக்கி இருக்கிறார்கள். நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் புகைப்படம், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொனனால் போதும், சிசிடிவியை ஆராய்ந்து உடனே சென்னை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தினமும் ஏராளமானோருக்கு இப்படி போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசார் அபராதம் விதித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகிறார்கள். அப்படி அளிக்கும்புகார்களில் நேரம், இடம் குறித்து தகவல்கள் இருப்பதில்லை. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ட்விட்டர் பக்கத்தில் முதல்முறையாக பதிவிடுவோர் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். அப்படி அறிவித்த பின்னர் ஏராளாமானோர் கொத்தாக மாட்டி வருகிறார்கள்.
சென்னை புரசைவாக்கத்தில் போக்குவரத்து சிக்னலில் உள்ள ஸ்டாப் லைனை நின்ற பலருக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.இது தொடர்பாக ஒருவர் புகைப்படம் எடுத்து பதிவிட்டதின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஹெல்மெட் அணியாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications