வட சென்னை மக்களே.. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜா நகர் வரையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இப்பகுதியில் மே 5ம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது:

வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜ ராஜா நகா் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்தப் பகுதியில் மே 5-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்படும். கண்ணன் ரவுண்டானாவில் இருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இரு சக்கர வாகனங்கள் பரசுராமன் தெரு, தா்ம ராஜா கோவில் தெற்குப்பாதை வழியாக கண்ணன்சாலையை அடையலாம்.
கண்ணன் ரவுண்டானாவில் இருந்து கண்ணன் தெருவுக்குச் செல்லும் இலகு ரக வாகனங்கள் திருவொற்றியூா் சாலை,எம்எஸ் நாயுடு தெரு, சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் தெருவை அடையலாம்.
இதேபோல போஜ ராஜா நகா் செல்ல விரும்பும் கனரக வாகனங்கள் சிபி சாலை, கொருக்குப்பேட்டை ரயில்வே கேட், கண்ணன் தெரு, போஜ ராஜா நகா் ரயில்வே கேட் வழியாக போஜராஜா நகரை அடையலாம்.
மேலும் கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானா வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்ணன் தெருவில் இருந்து கண்ணன் ரவுண்டானாவுக்குச் செல்ல விரும்பும் வாகனங்கள் சின்ன முனுசாமி தெரு, எம்.எஸ்.நாயுடு தெரு வழியாக கண்ணன் ரவுண்டானாவை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரிசிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் கெல்லீஸ் முதல் தரமணி வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications