Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்ம சென்னையிலா இப்படி.. மெய்சிலிர்க்க வைத்த மக்கள்.. மிரள வைத்த போக்குவரத்து போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி ஆக்சன் காரணமாக சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவது கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் சிக்னல் லைனை மீறாமல் மக்கள் சென்ற புகைப்படத்தை சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மகேஷ் பாபு ஒரு தெலுங்கு படத்தில் முதல்வராக நடித்திருப்பார், பரத் எனும் நான் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது அந்த படம். அந்த படத்தில் அவர் வெளிநாட்டில் இருந்து வந்த உடனே நம்மூர் போக்குவரத்து விதிமீறல்களை கண்டு அதிர்ச்சி அடைவார். அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று ஆதங்கப்படுவார். அதன்படி அபராதமும் முதல்வரான உடன் விதிப்பார். இதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம் என்கிற நிலையில், நிஜத்திலும் சாத்தியம் ஆகி வருகிறது.

Chennai traffic police share beautiful photos of people follow the rules

ஆம் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. நம்மூரு மக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது என்பது சர்வ சாதாரணம்,இதெல்லாம் குற்றமா என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள், மாட்டினால் போலீசுடன் சண்டை தான். ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லையிலே யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடுவது இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். இதுதான் கள எதார்த்தம்.

Chennai traffic police share beautiful photos of people follow the rules

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள். இப்படித்தான் சில மாதம் முனபு வரை சென்னையில் இருந்தது. ஆனால் சென்னை போககுவரத்து போலீசார் எடுத்த அதிரடி ஆக்சனால் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு பயப்படும் நிலை வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என சென்னையில் பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Chennai traffic police share beautiful photos of people follow the rules

இதெல்லாம் எப்படி நடந்தது என்றால், போக்குவரத்து போலீசாரின் சோதனையில் அல்ல.. பொதுமக்களின் சோதனையில் நடந்திருக்கிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இதை பார்த்த பலரும் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரை டேக் செய்து போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளித்து வருகிறார்கள்.அப்படி அளித்த பலருக்கும் சென்னை மாநகர போலீசார் பதில் அளித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். போலீஸ் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரும் சிக்கி இருக்கிறார்கள். நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் புகைப்படம், புகைப்படம் எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொனனால் போதும், சிசிடிவியை ஆராய்ந்து உடனே ஆக்சன் எடுக்கிறது சென்னை போலீஸ். போக்குவரத்து விதிமீறலுக்காக குறிப்பிட்ட நபருக்கு அபராதம் கட்ட சொல்லி அவரது செல்போனிற்கே நோட்டீஸ் பறக்கிறது.

Chennai traffic police share beautiful photos of people follow the rules

இதுவரை ஐந்தாயிரம் பேருக்கு பதில் அளித்து நடவடிக்கை எடுத்திருக்கிறது சென்னை போக்குவரத்து போலீஸ். சென்னை போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி ஆக்சன் காரணமாக சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவது கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் சிக்னல் லைனை மீறாமல் மக்கள் சென்ற புகைப்படத்தை சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்தால் நம்ம சென்னையா இப்படி மாறியிடுச்சு இன்று ஆச்சயர்படவைத்துள்ளது. இந்த ஆக்சன்கள் சென்னையை தாண்டி மற்ற ஊர்களில் நடந்தால் கஷ்டம் தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+