சனிக்கிழமை இரவு.. மறந்தும் அந்த தப்பு செஞ்சுடாதீங்க.. சென்னை போலீஸ் அதிரடி திட்டம்
சென்னை: சனிக்கிழமை இரவு போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை பாயப்போகுது.. சென்னை போக்குவரத்து போலீசார் அதிரடி திட்டம் வகுத்துள்ளார்கள். எனவே சென்னை மற்றும் புறநகரில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் இரவு 12 மணி வரை சரக்கு அடிச்சிட்டு வாகனத்தில் போனால் கண்டிப்பாக அபராதம் உறுதியாகிவிடும்.
சென்னை போலீசார் பொதுவாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது தினசரி நடவடிக்கை எடுப்பார்கள். அது எப்படிஇருக்கும் என்றால் மிகவும் வழக்கமான அதாவது நர்மலான நடவடிக்கையாக இருக்கும்.

தினசரி சோதனை நடத்தும் இடங்களில் நடத்தி விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இரவு நேரங்களில் ஒரு போலீஸ் நிலைய எல்லையில் ஒரு இடம் என்கிற அளவில் எங்காவது சோதனை செய்வார்கள். பழைய குற்றவாளிகள் சிக்கினால் பிடிப்பார்கள். சந்தேகத்திற்கு இடமான வகையில் செல்வோரை பிடித்து விசாரிப்பார்கள்.
மது அருந்திவிட்டு செல்வோரை பிடித்தால் அபராதம் விதிப்பார்கள். கார்களில் செல்வோர் தாருமாறாக சென்றாலோ, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தாலோ பிடித்து சோதனை செய்து குடிபோதையில் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். காரில் ஏதேனும் கடத்தல் பொருட்கள் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள். அப்படியான விஷயம் இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். இது எல்லாம் சென்னையில் தினசரி நடக்கும் எதார்த்தமான செயல்கள்.
ஆனால் வார இறுதியில் அவர்கள் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் வழக்கமான சோதனை மற்றும் நடவடிக்கையுடன், இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டிச்செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று கூறுகிறார்கள்.
இதனிடையே நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் 12 மணி வரை போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும் 3 இடங்களில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறார்களாம். பழைய வழக்குகளில் தொடர்புடைய அபராத தொகையை தீவிரமாக வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த ஒரு நடவடிக்கை மட்டும் வழக்கமாக சனிக்கிழமைகளில் செய்யப்படுவது தான்.
ஆனால் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுவாக அனைத்து குற்றங்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளார்கள். எனவே ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, இரவில் போதையில் சென்றாலோ, மூன்று பேர் ஒரே வாகனத்தில் சென்றாலோ, இன்சூரன்ஸ் இல்லாத வாகனத்தில் சென்றாலோ, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றாலோ, மது போதையில் கார் ஓட்டினாலோ கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். சோதனைகள் ஞாயிறுகளில் தீவிரமாக இருக்கும் என்பதால் யாருமே தப்பிக்க முடியாது.
சிம்பிளாக சொல்வது என்றால் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிறு வரை சோதனைகள் கடுமையாக இருக்கும். மதுபோதையில் செல்வோர் இந்த நாட்களில் தான் அதிகம் என்பதால் அவர்களை விரட்டி விரட்டி பிடித்து கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள். ஏனெனில் மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுவதை தடுக்கவே போலீசார் சோதனையை தீவிரப்படுத்த உள்ளார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications