சென்னை வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. இன்னைக்கு இந்த வழியா போகாதீங்க! போக்குவரத்து மாற்றம்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து போக்குவரத்துதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விக்டோரியா விடுதி சாலைக்கு செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

பாரதி சாலை ரத்னா கபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை, வாலாஜ சாலை வழியாக திருப்பி விடப்படும். பெல்ஸ் சாலையிலிருந்து கண்ணகி சிலை சாலை செல்ல அனுமதில்லை
பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை வழியாக பெல்ஸ் சாலை செல்ல அனுமதியில்லை.
குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக, நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும்.
வாகன நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கப்படாத வாகனங்கள், கலைவாணர் அரங்கம், ஓமந்துாரார் மருத்துவக்கல்லுாரி மைதானம், எம்.ஆர்.டி.எஸ்.சேப்பாக்கம், பொதுப்பணித்துறை மைதானம், சுவாமி சிவானந்தம் சாலை ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் நாளை குடியரசு தினம் என்பதாலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, "குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நாளை நடைபெறுகிறது. எனவே நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் பசுமை வழி சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம், திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம், வெங்கடேச அக்ரஹாரம் தெரு, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தாஞ்சன் சந்திப்பு, பி.எஸ்.சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வே சென்றடையலாம்.
அதேபோல் அடையாறில் இருந்து வரும் பிற வாகனங்கள், காந்தி சாலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டு ராயப்பேட்டை 1-பாயின்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வேக்கு சென்றடையலாம். மயிலாப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயின்ட்டில் இடது அல்லது வலது புறமாகத் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
மாநகர பேருந்துகள் இடது புறமாக திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக் கூண்டு வழியாக பிராட்வே சென்றடையும். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ்ஹவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லாமல், வடக்கு துறைமுகம் சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆர்.எச்., அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை, ஐஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடது அல்லது வலது புறம் திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்களது இலக்கை அடையலாம்.
அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை சந்திப்பில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. இதேபோல் பொதுமக்களின் வசதிக்காக அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும். குடியரசு தினத்தையொட்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க












Click it and Unblock the Notifications