வெறிச்சோடிய சென்னை.. சொந்த ஊருக்கு பயணித்த 27 லட்சம் பேர்! இதுதாங்க உண்மையான மெட்ராஸ்!
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊருக்கு சென்றதால் சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது. ஏறத்தாழ 1 லட்சம் வாகனங்கள் கடந்த 2 நாட்களில் சென்னையிலிருந்து வெளியேறியிருக்கிறது.
சொந்த வாகனங்கள் தவிர, பொதுப்போக்குவரத்துகளை பயன்படுத்தியும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இதனால் சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சென்னையிலிருந்து கடந்த 2 நாட்களில் 96,905 வாகனங்களில் பொதுமக்கள் விழுப்புரத்தை கடந்து சென்றுள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தற்போது வரை 51,905 வாகனங்களில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளனர். மக்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவே அதிக அளவில் சொந்த ஊர் திரும்பியதால் முக்கிய சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.
பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கிறது. கடந்த 2 நாட்களில் 7,500 அரசு பேருந்துகளில் இதுவரை 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சொந்த வாகனம், ஆம்னி பேருந்துகள் என்று கணக்கெடுத்துக்கொண்டால், மொத்தம் 17 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். அதேபோல சென்னையிலிருந்து சுமார் 10 லட்சம் பேர் ரயிலில் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். எனவே சென்னையின் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னை தவிர விழுப்புரம், திண்டுக்கல், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், இரண்டாம் தர நகரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications