சென்னையில் சோகம்.. கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி.. வீடு இடிந்ததில் 7 பேர் படுகாயம்!
சென்னை: சென்னை அருகே நாவலூரில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 2 குழந்தைகள் பலியாகினர். கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் ஒன்றரை வயது ஆண்குழந்தை, 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தனர். மேலும் 7 வயது சிறுவன் உள்பட 7 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

சென்னையை அடுத்த நாவலூர் அருகே சாமூண்டீஸ்வரர் நகரில் இன்று காலையில் திடீரென வெடிசத்தம் கேட்டது. பயங்கர சத்தத்துடன் கேட்டதால் என்னமோ, எதோ என பயந்து போன மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது 3 வீடுகள் சேதமடைந்து இருந்தனர்.
விசாரித்ததில் சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதி மக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றரை வயது ஆண்குழந்தை, 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தனர். மேலும் 7 வயது சிறுவன் உள்பட 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications