சென்னை உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுது.. இடித்துவிட்டு என்ன கட்ட போகிறார்கள் தெரியுமா?
சென்னை: சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள உதயம் தியேட்டர் என்பது சென்னையின் பழைய அடையாளங்களில் ஒன்று. சென்னையின் கேகே நகரையும், அசோக் நகரையும், ஜாபர்கான்பேட்டையையும், மேற்கு மாம்பலத்தையும் இணைக்கும் உதயம் தியேட்டர் வடபழனி, கோயம்பேடு செல்வோரால் மறக்கவே முடியாத இடம் ஆகும். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியான உதயம் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது. அங்கு என்ன வரப்போகிறது என்பதை பார்ப்போம்.
சென்னையின் மிகவும் பழமையான திரையரங்கங்களில் ஒன்று என்றால் அது உதயம் திரையரங்கம் தான்.. உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்' போன்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.. அந்த அளவிற்கு சினிமா காதலர்களின் சொர்க்க பூமியாக இருந்த இடம் உதயம் திரையரங்கம்.. சென்னை ஜாபர்கான் பேட்டையில் இருக்கும் உதயம் திரையரங்க உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன்' என்ற நான்கு திரைகளுடன் இயங்கி வந்தது. பழமை மாறாமல் அதே முகப்புடன் இருந்து வந்த உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறது.

1990களில் ரஜினி, கமல் படங்கள் பல உதயம் தியேட்டரில் வெள்ளி விழா கண்டுள்ளன. இதேபோல் நடிகர் விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான பல படங்களும் 100 நாட்களை கடந்து ஓடி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளன. பல ரசிகர்கள் தங்கள் நடிகர்களின் படங்களுக்கு கட்அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து, பிளக்ஸ் பேனர் வைத்த திருவிழா கொண்டாடிய இடமாக உதயம் திரையரங்கம் இருந்து வந்தது. ஆனால் மல்டி பிளக்ஸ் கலாச்சாரம் சென்னையில் வந்த பிறகு உதயம் மாதிரியான திரையரங்குகளின் மவுசு குறையத்தொடங்கியது.
குறிப்பாக மால்கள் அதிகரிக்க தொடங்கிய பின்னர், அதில் அதிநவீன வசதிகளுடன் தியேட்டர்கள் வர தொடங்கின. கார்ப்பரேட் நிறுவனங்களின் தியேட்டர்கள் தான் இப்போது சென்னையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த சூழலில் மெல்ல மெல்ல சாதாரண தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையின் அடையாளமாக இருந்து வந்த உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறது. தியேட்டர் இடிக்கப்பட உள்ள நிலையில், அங்கு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு வரவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
உதயம் திரையரங்குகள் செயல்படாதது, அருகில் உள்ள வியாபாரிகள் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 41 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உதயம் தியேட்டர் முடிவுக்கு வந்துள்ளது. உதயம் தியேட்டரில் இருந்து இடதுபுறம் திரும்பி வா என்றும். உதயம் தியேட்டரில் இருந்து வலதுபுறம் திரும்பி நேராக வா என்றும் ஒவ்வொருவருக்கும் திரையரங்கமாக மட்டுமின்றி அடையாளமாகவும் இருந்து வந்த இடம் நிரந்தரமாக மூடப்படுவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications