சென்னைப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஒரே மேடையில் சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலினும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மே 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழா வருகிற 16 ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முனைவர் பட்டம் என்று சொல்லக்கூடிய ஆராய்ச்சி படிப்பை முடித்த 731 பேருக்கும், மேலும் பல்வேறு படிப்புகளை முடித்த மொத்தம் 931 பேருக்கு ஆளுநரும் , முதல்வரும் பட்டங்களை வழங்க உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழகத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்யும் சட்ட மசோதா உள்பட, 25க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் பட்டமளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி ஆகிய இருவரும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மே 16ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று விழா பேருரை ஆற்றுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றுகிறார். பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications