சென்னை வடபழனி லாட்ஜ்ஜில் விபச்சாரம்? சிசிடிவி கேமராவை பார்த்து அதிர்ந்த போலீஸ்.. "அவரா"? இங்கேயுமா?
சென்னை: சென்னையில் வடபழனியில் உள்ள லாட்ஜில், விபச்சாரம் நடப்பதாக கூறி நடந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வடபழனி 100 அடி சாலையில் அந்த பிரபல ஓட்டல் செயல்பட்டு வருகிறது.. இது தங்கும் விடுதியாகவும் செயல்பட்டு வருகிறது.. இந்த ஓட்டலுக்கு கடந்த 31ம் தேதி போலீஸ் அதிகாரி என்று சொல்லி ஒருவர் வந்துள்ளார்.

ஓட்டல்: ஓட்டல் நிர்வாகத்தினரிடம், தன்னை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.. அத்துடன், "இந்த லாட்ஜில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது. எனவே லாட்ஜ் முழுக்க சோதனை செய்ய வேண்டும்" என்று சொல்லி உள்ளார்.
உடனே ஓட்டல் தரப்பினரும் அதற்கு சம்மதம் தந்து ஒத்துழைப்பு தந்தனர்.. பிறகு அந்த அதிகாரி, லாட்ஜிலிருக்கும் ஒவ்வொரு ரூமையும் திறந்து பார்த்து சோதனை செய்து வந்தார்.. ஆனால் எந்த அறையிலுமே பாலியல் தொழில் எதுவுமே நடக்கவில்லை..
மாமூல்: ஆனாலும் அந்த அதிகாரி ஓட்டல் ஊழியர்களிடம், "இனிமேல் ஒவ்வொரு மாதமும் எனக்கு மாமூல் தர வேண்டும்.. இதை உங்கள் லாட்ஜ் ஓனரிடம் சொல்லுங்கள்" என்று ஊழியர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
பிறகு, நடந்த சம்பவம் குறித்து லாட்ஜ் ஊழியர்கள், தங்கள் ஓனரிடம் சொன்னார்கள்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஓனர், உடனடியாக வடபழனி போலீசில் புகார் அளித்தார்...












Click it and Unblock the Notifications