4வது முறை.. சென்னை வந்தே பாரத் ரயிலும் விபத்தில் சிக்கியது.. கன்றுக்குட்டி மோதியதில் சேதம்!
சென்னை: மைசூருவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே கன்றுக் குட்டி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது.
இந்தியாவின் அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக வந்தே பாரத் ரயில் அறியப்படுகிறது.
நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் ரயில்
முதலாவதாக டெல்லி - வாரணாசி இடையே 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. 4-வதாக இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.

சென்னை- மைசூரு இடையே
இதையடுத்து அண்மையில் சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும். பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட இந்த ரயில், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடி கடந்த 12-ஆம் தேதி பெங்களூருவில் வைத்து இந்த வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை தொடங்கியதில் இருந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.

ஏற்கனவே 3 முறை
மாடுகள் தண்டவாளத்தின் குறுக்கே வருவதால் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதம் அடைந்து விடுகிறது. இதுவரை 3 முறை இத்தகைய விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கின்றன. வந்தே பாரத் ரயிலின் முன் பாகம் பிளாஸ்டிக் ஃபைபரில் தயாரிக்கப்பட்டது. இதனால் எளிதில் சேதம் அடைவதாக சொல்லப்படுகிறது. இன்ஜினுக்கு பாதிப்பு ஏற்படாவிட்டாலும் முன்பகுதி சேதம் அடைந்து விடுகின்றன.

குறுக்கே வந்த கன்றுக்குட்டி
சென்னை - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் தொடங்கி சுமார் ஒருவாரமே ஆன நிலையில் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. மைசூரூவில் இருந்து வந்து கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே வந்த போது தண்டவாளத்தின் குறுக்கே கன்றுக் குட்டி வந்துள்ளது. இதில் ரயில் கன்றுக்குட்டி மீது வேகமாக மோதிவிட்டு சென்றது. கன்றுக்குட்டி மீது மோதியதில் ரலியின் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

பயணிகள் சிரமம்
இந்த விபத்து காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. நடு வழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து ரயில் புறப்பட்டு சென்னை வந்தடைந்தது. வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்குவது இது 4-வது முறையாகும்.

உரிமையாளரை கண்டறியும் பணி
சென்னை - மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்கு காரணமான கன்றுக்குட்டியின் உரிமையாளரை கண்டறியும் பணி நடக்கிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications