சென்னை மக்களே கவனம்.. இன்று நாள் முழுக்க மின்சாரம் இருக்காது.. உங்க ஏரியா இருக்கா பாருங்க முதல்ல
சென்னை: வாரத்தின் முதல் வேலை நாளான இன்று நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள பல ஏரியாக்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இதற்கேற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளவும்.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தேவைக்கு ஏற்ப மின்சாரத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் மின்வெட்டு இருந்தது. இருப்பினும், அதன் பிறகு மின்சார தேவை பூர்த்தி செய்யத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அதிகரித்தது.

அதன் பலனாக மின் உற்பத்தி அதிகரித்த நிலையில், தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியது. குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் தமிழ்நாடு அதிகளவில் மின் உற்பத்தி செய்வதாகக் கூறப்படுகிறது.
மின்சாரம்: இதன் காரணமாக முன்பு அடிக்கடி ஏற்பட்ட அறிவிக்கப்படாத மின் தடை இப்போது இல்லாமல் போயுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் பராமரிப்பிற்காக மட்டுமே அறிவிக்கப்பட்ட மின்தடை இருக்கிறது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையில் கீழ் வரும் இடங்களில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் இங்கே மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
மயிலாப்பூர் பகுதியில் ஃபோர்ஷோர் எஸ்டேட் சாந்தோம் ஹைரோடு, முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்ட சாலை, லாஸ் சர்ச், ரோசரி சர்ச் சாலை, முத்து தெரு, குட்சேரி சாலை, பாபநாசம் சாலை, கன்னிலால் தெரு, சோலையப்பன் தெரு, மந்தைவெளி வெங்கடேச அக்ரஹாரம், திருவள்ளுவர்பேட்டை தெரு ஆகிய இடங்களில் இன்று மின்சாரம் இருக்காது.
மின்தடை எங்கே: அதேபோல அடையாறு பகுதியில் எஞ்சம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், குய்-டி-மில்லத் தெரு, ஆதித்தியராம் நகர், ஜே. நகர், பண்ணையூர் குப்பம் ஆகிய பகுதிகளில் இன்று மின்வெட்டு இருக்கும்.
மேலும், தாம்பரம் பகுதியில் சிட்லபாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, மந்த்வெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், வேளச்சேரி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார சப்ளை பாதிக்கப்படும்.
கிண்டியை பொறுத்தவரை நங்கநல்லூர் மடிப்பாக்கம், பஜனை கோயில் தெரு, வீராசாமி தெரு, திருமலை தெரு, எத்திராஜலு தெரு, டாக்டர் அம்பேத்கர் சாலை, ஜீவா நகர், ராஜலட்சுமி நகர், பாரதியார் சாலை, பாவேந்தர் பாரதிதாசன் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வட சென்னை: சிறு, குறு, தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் ஆவடியில் ராவேந்தரா நகர், சோழன் நகர், சீனிவாசா நகர், சிவசங்கராபுரம், தென்றல் நகர், மூர்த்தி நகர்ப் பகுதிகளில் இன்று மின்சாரம் இருக்காது.
தண்டையார்பேட்டை பகுதியில் எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணாநகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், வி.ஓ.சி. நகர், உலகநாதபுரம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எர்ணாவூர் குப்பம், சண்முகபுரம் ஆகிய பகுதிகளிலும் இன்று மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் எல்லாம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சப்ளை நிறுத்தப்படும். அதன் பிறகு மின்சாரம் வழங்கப்படும். பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்தால், விரைவாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications