இங்க எப்ப வேணும்னாலும் வெடிக்கும்".. காலையிலேயே பரபரத்த வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன்.. விறுவிறு சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால், ஒட்டுமொத்த சென்னையும் இன்று காலையிலேயே பரபரப்பாகிவிட்டது.. வேளச்சேரி பகுதியில் போலீசார் குவிந்து, அதிரடியாக சோதனையையும் நடத்தியிருக்கிறார்கள். என்ன நடந்தது?

சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.. போன் மூலமும், மெயில்கள் மூலமும் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்றெல்லாம் மிரட்டல் அழைப்புகள் வருவது வழக்கமாகவிட்டது..

chennai velachery flyover bomb threat

இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. கடைசியில் அவை புரளி என தெரியவந்தது.

புரளிகள்: திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், ரயில்வே போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள்.. ஆனால், அதுவும் புரளி என தெரியவந்தது.. இந்த புரளியை கிளப்பிய வண்ணார்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் (42) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்தார்..

வேளச்சேரி: அதுவும் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கே போனை போட்ட அந்த நபர், "வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்" என்று சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டாராம். இதைக்கேட்டு அதிர்ந்து போன போலீசார், உடனடியாக வேளச்சேரி போலீசாருக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் உடனடியாக வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் இறங்கினார்கள்.. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த தீவிர சோதனை நடத்தப்பட்டது.. ஆனால், அப்படி வெடிகுண்டு எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை.. இதுவும் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.. ஆனால், இந்த மிரட்டலை விடுத்த நபர் யார் என்று தெரியவில்லை.. அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

மேம்பாலம்: வேளச்சேரி மேம்பாலத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை இன்று காலையிலேயே தந்துவிட்டது.. கிட்டத்தட்ட 3 மணி நேரம் போலீசார் மேற்கொண்ட சோதனையில், வேளச்சேரி பகுதியே வெலவெலத்து போய்விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+