பிரபல நடிகருக்கு இதெல்லாம் தேவையா? கிறங்கடித்த வியாசர்பாடி அழகி அகிலா.. சென்னையே முழிக்குது போங்க
சென்னை: அகிலா என்ற பெண் யார் என்று தெரியவில்லை.. அவரால் ஒரு நடிகர் கதிகலங்கி போயுள்ளார்.. நிஜமாகவே அகிலா என்ற பெண் ஒருவர் இருக்கிறாரா?
தொழில்நுட்பங்கள் பெருக பெருக, அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டதை மறுக்க முடியாது.. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், பலவிதமான எச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு விடுத்து வருகிறார்கள்.

நடிகர்: ஆனாலும், பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. செல்போன்களை, யாராலுமே தவிர்க்க முடியாத பட்சத்தில், இதையே சாக்காக பயன்படுத்தி நூதன கொள்ளைகளில் மர்மகும்பல்கள் இறங்கி உள்ளனர். போலீசார் எத்தனையோமுறை அறிவுறுத்தியும்கூட, பொதுமக்களில் பலரும் விழித்து கொள்வதில்லை. இதோ ஒரு நடிகரே இந்த படுகுழியில் விழுந்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் தாமோதர கண்ணன்.. இவருக்கு 24 வயதாகிறது.. சினிமாவில் துணை நடிகராக வேலைபார்த்து வருகிறார்.. கடந்த ஒரு மாதமாக Say Hi என்ற ஆப்பை தன்னுடைய செல்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்திருக்கிறார்.. இந்நிலையில், இந்த ஆஃப் மூலம் அகிலா என்ற பெண்ணிடமிருந்து மெசேஜ் ஒன்று வந்துள்ளது.
ஆபாச போட்டோ: அதில், 1,000 ரூபாய் பணம் அனுப்பினால், தன்னுடைய ஆபாச போட்டோவை அனுப்பி வைப்பதாக மெசேஜில் கூறியிருந்தார்.. உடனே, தாமோதர கண்ணனும், ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்துவிட்டு, ஆவலுடன் காத்திருந்தார்.
ஆனால், ஆபாச போட்டோ வரவேயில்லை.. இதனால், கடுப்பான தாமோதர கண்ணன், பணம் அனுப்பிய அந்த செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். ஆனால் செல்போன், ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இதனால், தாமோதர கண்ணன் குழம்பி போனார். பிறகு, வேறொரு நம்பரில் இருந்து, நடிகருக்கு போன் வந்தது.. அதில் பேசியவர்கள், சைபர் கிரைம் போலீசார் என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டார்கள்..
அகிலா எங்கே?: "அகிலா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார், அவரிடம் நீங்கள் ஆபாசமாக பேசியிருக்கிறீர்கள்.. ஆபாச போட்டோவையும் அனுப்புமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறீர்கள்.. உங்களின் வற்புறுத்தலால்தான், அகிலா தற்கொலை செய்து கொண்டார்.. அகிலா தற்கொலைக்கு காரணம் நீங்கள் தான்... உங்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 60 ஆயிரம் ரூபாயை உடனே அனுப்பி வையுங்கள்" என்று கூறியிருக்கிறார்கள்.
இதைக்கேட்டதும் நடிகருக்கு வெலவெலத்து போய்விட்டது.. தற்கொலை செய்து கொண்டதால்தான், அகிலா போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டதா? என்று நடுநடுங்கி போனார்.. உடனே அவர்கள் சொன்ன நம்பருக்கு, கையிலிருந்த 13 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்தார்.. மீதி பணத்தை பிறகு தருவதாக சொல்வதற்காக, அந்த நம்பருக்கு போன் செய்துள்ளார் நடிகர்.
நம்பர் ஸ்விட்ச் ஆப்: ஆனால், இந்த நம்பரும் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதையே நடிகர் உணர்ந்துள்ளார்.. உடனே வியாசர்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்.. நடந்த சம்பவத்தையெல்லாம் சொல்லி புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது..
மோசடிகளிடம் ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீஸ் பொதுமக்களுக்கு வார்னிங் தந்து வந்தால், அந்த சைபர் கிரைம் போலீஸ் போலவே மோசடிகள் களமிறங்கி உள்ளது அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. ஆனால், ஒரே ஆபாச போட்டோவுக்கு சபலப்பட்டு, 1000 + 13000 ரூபாய் பணத்தை இழந்துவிட்டாரே மிஸ்டர் துணை நடிகர்..!!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications