சென்னையை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்.. சமாளிக்க முடியல.. 4000 ஹோட்டல்களை மூட முடிவு!
Recommended Video
சென்னை: சென்னையை ஆட்டிப்படைக்கும தண்ணீர் பஞ்சத்தால் 4000 ஹோட்டல்களை மூட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் திடீரென உயர்ந்தது.
இதன்தொடர்ச்சியாக கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

4000 ஹோட்டல்கள் மூட முடிவு
தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன்காரணமாக சென்னையில் 4000 ஹோட்டல்களை மூட ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மதிய சாப்பாடு நிறுத்தம்
ஏற்கனவே சென்னை நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான உணவகங்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. பல மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

வெளியூர் இளைஞர்கள்
சென்னையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தனியாக வீடு எடுத்தும் தங்கும் விடுதிகளிலும் தங்கியுள்ளனர்.

உணவங்களை நம்பியே
அவர்களின் பசியை போக்குவது உணவகங்கள்தான். ஒருநாள் உணவகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலே அவர்களின் நிலைமை திண்டாட்டம் ஆகிவிடும்.

சமாளிக்க முடியவில்லை
இந்நிலையில் சென்னையில் மேலும் 4000 ஹோட்டல்கள் மூடப்படும் என தகவல் வெளியாகியிருப்பது பலரின் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கியுள்ளது. உணவகங்களில் உள்ள மோட்டார்களில் தண்ணீர் வராத நிலையில் தனியார் தண்ணீர் லாரிகளுக்கும் தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளதால் உணவக உரிமையாளர்கள் இந்த முடிடிவ எடுத்துள்ளனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications