சென்னைக்கு அருகே! வேகமாக வந்த 1000 மின்னல் கூட்டம்! வானத்துக்கும் பூமிக்கும் மோதல்! கடைசியா ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கிய நிலையில் சென்னை ரெயின் வானிலை அமைப்பு மின்னல் வெட்டு தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இது மக்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது. முக்கியமாக சென்னையில் நேற்று பெரிதாக வெயில் அடிக்கவில்லை.

பகல் நேரத்தில் நேற்று 33 டிகிரி செல்ஸியஸ் வரை மட்டுமே வெயில் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது.

Chennai Weather: 1000 cloud to ground strikes were happening over the sea

இந்த மழைக்கு இடையே சென்னையில் ஆங்காங்கே மின்னல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. சென்னையில் இன்று பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கிய நிலையில் சென்னை ரெயின் வானிலை அமைப்பு மின்னல் வெட்டு தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், மழை மேகங்கள் சென்னைக்கு வடகிழக்கே இருக்கும் பொது கடலில் காலை 8 மணி அளவில் 1000 மின்னல்கள் மேகத்தில் இருந்து கடலில் தாக்கின. இந்த மழை மேகங்கள் சென்னை வான் பகுதிக்கு வரும் முன் வலிமை இழந்தன.

இல்லையென்றால் சென்னையில் இந்த மின்னல்கள் தாக்கி.. முழுக்க முழுக்க வான் பகுதியில் லைட் மட்டுமே இருந்திருக்கும்., என்று கூறி உள்ளனர்.

பொதுவாக மின்னல் என்பது மேகத்திற்கும் - மேகத்திற்கும் இடையில், மேகத்திற்கு உள்ளேயே, மேகத்திற்கும் பூமிக்கும் இடையில், மேகத்திற்கும் காற்றிற்கும் இடையில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு நேர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் வானத்தில் எதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகே வரும் போது அவை இரண்டிற்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து சக்தியை வெளிப்படுத்தும்.

இவைதான் மின்னல்கள் ஆகும். இந்த மின்னூட்ட வேறுபாடு பூமிக்கும் மேகத்திற்கும் இடையே ஏற்படும் பட்சத்தில் அவை முகில் - புவி மின்னல் எனப்படும். அதாவது மின்னல் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும். இது போக முகில் - முகில் மின்னல் இரண்டு மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னல் ஆகும்.

முகில் மின்னல், ஒரே மேகத்திற்கு உள்ளேயே ஏற்படும் மின்னூட்ட வேறுபாட்டால் ஏற்படும் மின்னல் ஆகும். மேற்கட்ட இரண்டும் பூமியை தாக்காது. காற்றுக்கும் - மேகத்திற்கும் இடையே ஏற்படும் மின்னல் முகில் - வளி மின்னல் ஆகும்.

இதில் சென்னைக்கு அருகே கடல் பகுதியில் புவி - முகில் மின்னல்தான் ஏற்பட்டுள்ளது.

மழை நிலவரம்: இது போக திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இங்கு இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+