Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கி.வீரமணி வைத்த கோரிக்கை... உடனே ஏற்ற தமிழ்நாடு அரசு! சென்னையில் மணியம்மையார் பெயரில் சாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எழும்பூர் வேனல்ஸ் சாலையின் பெயரை அன்னை ஈ.வே.ரா. மணியம்மையார் சாலை என மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பின்பகுதியிலிருந்து செல்லும் வேனல்ஸ் சாலையின் பெயரை ஈ.வே.ரா. மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்யுமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Chennai Whannels road name was changed as Annai Maniyamaiyar road by Tamilnadu government

அதில், "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் பாதுகாத்து அவரது இயக்கமாம் திராவிடர் இயக்கத்தை மேலும் ஐந்தாண்டு காலம் காத்தவரும், ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லம் அமைத்தும், மேலும் 60 ஆண்டுகளாக திருச்சியில் கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவருமான அன்னை ஈ.வே.ரா. மணியம்மையார் அவர்களது நூற்றாண்டை அரசு சார்பில் நடத்திடும் வாய்ப்பை இதற்கு முன் பெறவில்லை.

இந்த நிலையில், பெரியார் ஈ.வே.ரா. சாலை அருகில் உள்ள வேனல்ஸ் சாலையில் அன்னை ஈ.வே.ரா. மணியம்மையார் அவர்களின் முழு உருவச் சிலை தமிழ்நாடு அரசின் உரிய அனுமதியோடு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் 1994 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அந்த சிலை அமைந்து இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பின்பகுதியிலிருந்து செல்லும் வேனல்ஸ் சாலையின் பெயரை அன்னை ஈ.வே.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்வது அவரது நூற்றாண்டு காலக்கட்டத்தை அன்னை ஈ.வே.ரா. மணியம்மையாரை பெருமைப்படுத்தியதாகவும், மகளிர் மாண்பை உயர்த்தியதாகவும் இருக்கும்." என கோரி இருந்தார்.

இதனை ஏற்று சென்னை மாநகராட்சி மண்டலம் 5-க்கு உட்பட்ட சென்னை வேனல்ஸ் சாலையை அன்னை ஈ.வே.ரா.மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை வெளியிட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+