சென்னை மதுரவாயலில் காதலனுடன் மது விருந்து.. காதலி இருந்த கோலம்.. கோழி கறிதான் காரணமா?
சென்னை: மது அருந்துவது என்பது மிகவும் தவறான கலாச்சாரம் என்றாலும், பலர் எல்லை மீறி அந்த பழக்கத்தை தொடர்கிறார்கள். மதுபழக்கம் உடல் நலத்தை பாதிக்கும் என்றாலும், அதை கவனிப்பதே இல்லை. இளம் வயது சிறார்கள் கூட மதுவிற்கு அடிமையாகிவிட்டார்கள். பெண்களும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்கள். முன்பை விட மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகவிட்டது. சென்னை மதுரவாயலில் காதலனுடன் மது அருந்திய இளம்பெண்ணுக்கு என்ன நடந்தது தெரியுமா? இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னையில் பிரபலமான கல்லூரிகளில் படிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.அவர்கள் அறை எடுத்து தங்கி படிக்கிறார்கள். அதேபோல் பலர் படித்துவிட்டு அறை எடுத்து தங்கி வேலை செய்கிறார்கள். இவர்களில் சிலர் மது பழக்கத்தை ஆளாகிறார்கள். கல்லூரியில் படிக்கும் போதே சக மாணவர்களுடன் தொடரும் பழக்கம், வேலை செய்யும் காலத்தில் அதிகமாகிவிடுகிறது. அதேபோல் இப்போது கல்லூரியில் படிக்கும் பெண்களே மாணவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும் அதிகமாகி வருகிறது.

மது விருந்துகள்
வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவுகளில் ஈசிஆர் சாலைகளில் சர்வ சாதாரணமாக ஜோடியாக மது விருந்தில்பங்கேற்பதை காண முடியும். அங்கு மட்டுமல்ல பல பப்களில், பெரிய பார்களில் பெண்களை பார்க்க முடியும். ஜோடி ஜோடியாக மது அருந்துவார்கள். அதேபோல் கல்லூரி மாணவிகள், மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி மது அருந்துவதும் நடக்கிறது. அதேபோல் வேலை செய்பவரகளும் ரூம்களில் மது அருந்துவது அதிகமாகிவிட்டது. ஜோடி ஜோடியாகவும் சிலர் மதுஅருந்துகிறார்கள். அத்துடன் கோழி இறைச்சியை அதிகமாக சாப்பிடுகிறார்கள். அப்படி ஒரு காதல் ஜோடி மது அருந்திவிட்டு கோழி இறைச்சி சாப்பிட்டு உள்ளது. அவர்களுக்கு நடந்ததை பார்ப்போம்.
மதுரவாயல் வீடு
சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 29 வயதாகும் கணேஷ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டம் பெற்ற நிலையில், சினிமா டைரக்டராக முயற்சி செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் சேலம் ஆகும். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 26 வயதாகும் ஸ்ரீலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
மது விருந்து
நாளடைவில் அது காதலாக மாறியது. ஸ்ரீலட்சுமி, நந்தனத்தில் உள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஸ்ரீ லட்சுமி வேலை முடிந்ததும் காதலன் கணேஷ் ராம் தங்கியுள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளார்கள்.
காதலிக்கு என்ன நடந்தது
சிறிது நேரத்தில் ஸ்ரீ லட்சுமிக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. அவர், கழிவறைக்குள் சென்றபோது மயங்கி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ் ராம், மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், ஸ்ரீ லட்சுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் இளம்பெண் மது அருந்திவிட்டு, அளவுக்கு அதிகமாக கோழி இறைச்சியை சாப்பிட்டதால் உணவு குழாயில் அடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாகவும், எனினும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே ஸ்ரீலட்சுமியின் நிலைக்கு உண்மையான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications