ஹேப்பி நியூஸ்.. சென்னையில் ஜூன் 18, 19 கனமழை பெய்யும்.. நார்வே வானிலை மையம் அலர்ட்
சென்னை: சென்னையில் அடுத்த வாரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பம் தகித்து வருகிறது. சென்னை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. காலை 7.30 மணிக்கு கூட சுளீரென வெப்ப கதிர்கள் முகத்தில் அடிக்கிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தின் வெப்பம் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் சென்னை, குமரி, திண்டுக்கல், திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட மிக அதிகமான வெப்பநிலை நிலவும். 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்.
தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அது போல் ஜூன் 14 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நார்வே வானிலை மையம் கூறியிருப்பதாவது: நாளை மதியம் சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு வரும் சனிக்கிழமை அதாவது ஜூன் 17ஆம் தேதி மதியமும் மாலையும் மிதமான மழை பெய்யும். அது போல் வரும் 18 ஆம் தேதி காலையை தவிர மதியம், மாலை, இரவு நேரங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் திங்கள்கிழமை ஜூன் 19ஆம் தேதி முழுவதும் சென்னையில் கனமழை பெய்யும். அது போல் 20ஆம் தேதியும் மழை பெய்யும். 21 ஆம் தேதி மாலை கனமழை பெய்யும். இவ்வாறு நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications