மக்களே கவனம்.. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்கிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் விட்டு விட்டு மழை பெய்தது.

அதிகாலையில் மழை
அது போல் சென்னையிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் மக்கள் தீபாவளியை கொண்டாட முடியாமல் அவதிப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலையிலிருந்தே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மிதமான மழை
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும்.

பரவலாக மழை
இன்று அதிகாலை தொடங்கிய மழை சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்தது. சென்னை அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி நகர், கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

10 மாவட்டங்கள்
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications