இருக்கு.. இன்னைக்கு சென்னையில கனமழை இருக்கு.. வானிலை மையம் சொல்லியிருக்கறத பாருங்க!
Recommended Video

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து சற்று விடுதலையாகியுள்ளனர் சென்னை மக்கள்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

தண்ணீர் பஞ்சம்
பருவமழை, கோடை மழை என அனைத்தும் கைவிரித்ததால் சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாயினர்.

நீர்மட்டம் உயர்வு
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை மக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதோடு சென்னையின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

இன்று கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் சென்னை உட்பட வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலில் கூறிருப்பதாவது, தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது.

வட தமிழகத்தில் கனமழை
இதன் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கனமழை
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நேற்றை போலவே இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications