சென்னைக்கென்று.. "ஸ்பெஷல் எடிஷனுடன்" காத்திருக்கிறது மழை.. வெதர்மேன் குட் நியூஸ்!
சென்னையில் மட்டும் தனியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: சென்னையில் மட்டும் தனியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்து இருக்கிறார்.
சென்னையில் மழையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரம் அங்கு தொடங்கிய மழை இன்னும் விடவில்லை. இன்னும் மூன்று நாட்களுக்கு அங்கு மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடைசி கட்டத்தில் மிக தீவிரமாக பெய்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

என்ன போஸ்ட்
தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் , மிகவும் வித்தியாசமான வடகிழக்கு பருவமழை தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தற்போது நல்ல மழை காலம் தமிழகத்தில் நிலவி வருகிறது. குன்னூர் பெல்ட் பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா எப்படி
அதேபோல் டெல்டாவில் சில பகுதிகளில் மதியத்தில் இருந்து இரவு வரை மழை பெய்யும். அதேபோல் எப்போதும் போல இரவில் இருந்து காலை வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும். ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை மழை பெய்யும் .

ஆனால் என்ன
ஆனால் இங்கெல்லாம் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மட்டும் எப்படி தனியாக கனமழை பெய்ததோ அதேபோல் கனமழை மீண்டும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் மழை கண்டிப்பாக பெய்யும்.

தினமும் மழை
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் வரும் டிசம்பர் 7 மற்றும் 8ம் தேதிகளில் இருந்து மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் ஒரு நாளுக்கு முன்பாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் தினமும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications