சென்னை வண்ணாரப்பேட்டையில் அடுக்குமாடி ‘லிப்டில்’ சிக்கி தவித்த பெண்கள்.. உடைக்கப்பட்ட கதவு
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது இங்கு சுமார் 1,440 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு லிப்ட் வசதியும் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர். திடீரென அந்த லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் பயத்தில் கூச்சலிட்டு அலறினர். நல்லவேளையாக கதவை உடைத்து காப்பாற்றப்பட்டனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம், ராமதாஸ் நகரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 1,440 வீடுகள் உள்ளன. இந்த வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம், 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு கட்டப்பட்ட வீடுகள் 2015ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியும் சுமார் 380 சதுர அடி பரப்பளவு கொண்டதாக அமைக்கப்பட்டிந்தது. இதில் ஒரு படுக்கையறை, ஒரு வரவேற்பறை, சமையலறை மற்றும் கழிப்பறை வசதிகள் இருக்கின்றன.

குடியிருப்பு வளாகத்திற்குள், வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி மற்றும் லிப்ட் வசதிகள் ஆகியவை அப்போது ஏற்படுத்தப்பட்டன. இதேபோல் பூங்கா, விளையாட்டு இடம், சமுதாயக் கூடம், அங்கன்வாடி மையம் மற்றும் ஆரம்பப் பள்ளி போன்ற பொது வசதிகளும் அமைக்கப்பட்டன.
இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 'லிப்டில்' நேற்று முன்தினம் நள்ளிரவு அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 2 பெண்கள் சென்றனர். திடீரென 'லிப்ட்' பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் 'லிப்டு'க்குள் சிக்கிய பெண்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்கள்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் நீண்டநேரம் போராடி 'லிப்டின்' கதவை உடைத்து, உள்ளே சிக்கி இருந்த 2 பெண்களையும் பத்திரமாக மீட்டனர். உரிய பராமரிப்பு இல்லாததால் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 'லிப்டு'கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக, அந்த குடியிருப்பு மக்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 'லிப்டில்' சிக்கி தவித்த பெண்களை மீட்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications