சென்னை அடையாறு அகலமாகிறது.. 2.5 கி.மீ நீளத்திற்கு மிகப்பெரிய திட்டம்.. மேஜர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், திருநீர்மலை-அனகாபுத்தூர் இடையே அடையாறு ஆற்றை ரூ.70 கோடி செலவில் அகலப்படுத்த சென்னையின் நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வருவதற்குள் இந்த திட்டத்தை எப்படியாவது முடித்தாக வேண்டும் என டார்க்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடையாறு ஆறு தாம்பரம் அருகே ஆதனூரில் தனது பயணத்தை தொடங்கி, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், முடிச்சூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக சென்னை நகருக்குள் வந்து இறுதியாக கடலைச் சென்றடைகிறது. இந்த ஆற்றின் முழு நீளம் 42 கி.மீ ஆகும்.

நீர்வளத்துறை தற்போது அடையாறு ஆற்றின் அகலத்தை 100 அடியில் இருந்து 360 அடியாக அதிகரிக்கவும், இதற்காக ஆற்றின் ஓரத்தில் 2.5 கி.மீ நீளத்திற்கு நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. குன்றத்தூர் அருகே அடையாற்றின் ஆற்றங்கரையோரம் உள்ள தரிசு நிலமான 17.7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களை காலி செய்ய வைத்து அடையாற்றை பலப்படுத்த நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
அடையாறு ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் திட்டத்திற்கான டெண்டர் விடும் பணியும் முடிவடைந்துவிட்டது. அடையாற்றை அகலப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கிய அதிகாரிகள், திருநீர்மலை மற்றும் அனகாபுத்தூர் இடையே ஆற்றின் தற்போதைய அகலம் 100 அடிக்கும் குறைவாக உள்ளது. ஆனால் ஆற்றின் வரைபடத்தின்படி, 200-600 அடி வரை அகலம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வுகள் காரணமாகதான் ஆற்றில் நீர் பெருக்கெடுக்கும் போது வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது என்றார்கள்.
குன்றத்தூர் அருகே அடையாற்றின் ஆற்றங்கரையோரம் உள்ள கையகப்படுத்தப்பட வேண்டியது 17.7 ஏக்கர் நிலம் ஆகும்.இதில் அனகாபுத்தூர் பாலம் அருகே உள்ள ஒரு வீட்டைத் தவிர, மற்றவற்றில் பெரும்பாலும் ஆளில்லாமல் தான் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பிய வருவாய் துறை அதிகாரிகள், நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டாவது அறிவிப்பு கொடுக்கப்பட்டது, மேலும் செப்டம்பர் முதல் வாரத்திற்குள் நிலத்தை கையகப்படுத்தவும் நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.
சென்னை அடையாறு ஆற்றின் கரையை பலப்படுத்த வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை இப்போது பார்ப்போம். சென்னை மாநகரம் நகர்ப்புற வெள்ளத்தால் தமிழ்நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்படுகிறது. சென்னை போல் தமிழ்நாட்டில் வேறு எந்த நகரும் வெள்ளத்தால் இவ்வளவு பாதிப்புகளை ஆண்டுதோறும் சந்திப்பது இல்லை. அதற்கு முக்கிய காரணம் சரியான திட்டமிடல் இல்லாத அளவிற்கு நகரமயமாக்கல் தான். நீர்நிலைகளையும்,நீர்வழித்தடங்களையும் கண்டபடி ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டார்கள். இதுவே பெரிய சிக்கல்களுக்கு காரணம்.
சென்னைமாநகரம் 1.7 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவின் நான்காவது பெரிய நகரப்பகுதியாகும்.புறநகரையும் சேர்த்தால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும். சென்னையில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 26,000 நபர்கள் என்கிற அளவில் உள்ளது. மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் அதிக தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ள பகுதிதான் சென்னை. அத்துடன் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்று. இங்கு ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆறு சதவீதம் ஆக உள்ளது.
ஆனால் சரியான திட்டமிடல் இல்லாததால், சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்வதற்கு இந்த ஆக்கிரமிப்புகள் மிகப்பெரிய இடையூராக உள்ளன. இயற்கையாக இருந்த நீர்வழிப்பாதைகள் அழிக்கப்பட்டன. பல ஏரிகள் சுருங்கி போயின. இதற்கு அரசுகள் அனுமதித்ததும் பெரிய சிக்கல்களுக்கு காரணமாகியது.
சென்னை மாநகரில் உள்ள 19 முக்கிய நீர்நிலைகளில் பாதிக்கு பாதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இயற்கையாக தண்ணீர் தேங்க வேண்டிய பகுதிகள் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வெள்ளமாய் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. அதேநேரம் 2015ம் ஆண்டு வந்த வெள்ளம் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் மீதான கருணை பார்வையை அப்படியே மாற்றியது. அதன்பிறகு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பை மேற்கொள்ள அரசுகள் அனுமதிக்கவில்லை.
அதேபோல் பல நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்கவும், நீர் வழித்தடங்களை மேம்படுத்தவும் சென்னை மாநகராட்சி தீவிர முயற்சி எடுத்தது. அதற்கான பலனும் கிடைத்து வருகிறது. அதேநேரம் சென்னை நகரை வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாக்க தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை உருவாக்கி, நீர் வழித்தடங்களையும் உருவாக்கி வெள்ளத்தை வெளியே தேவையான உத்திகள் தேவை. எங்கெல்லாம் தண்ணீர் தேங்கும், அவற்றை வெளியேற்ற என்ன மாதிரியான வடிகால்களை அமைக்க வேண்டும் என்பதை கண்டறிந்து, தேவைப்பட்டால் நிலங்களை கையகப்படுத்தியும் நீரை வெளியேற்ற வேண்டும். அதுவே சென்னையை வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்க வைக்க நிரந்தரமாக உதவும்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications