இதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாமா கலையரசன்.. என்டெர்டெய்ன்மென்டே எண்டிங் ஆன சோகம்
Recommended Video

சென்னை: மியூஸிக்கலி ஆப் மூலம் பெண் போல் பாடி நடித்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்ததால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மியூஸிக்கலி என்ற செயலியில் இன்றைய இளைஞர்கள் மூழ்கியுள்ளனர். அதில் தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப்-ல் வித்தியாசமாக வேடம் அணிந்து சினிமா வசனங்களுக்கு நடித்துக் காட்டி அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றுவது தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

வாக்குமூலம்
அதுபோல் பாட்டு பாடுவதும் நடனம் ஆடுவதும் இதில் செய்கின்றனர். அபிராமியும் சுந்தரமும் கூட இந்த மியூஸிக்கலி ஆப் மூலம் பழக்கமானார்கள் என்று அபிராமியே தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குரல்களை பாடி
பொழுதுபோக்கு அம்சம் என்றால் அதில் சில மணித்துளிகளை செலவிடாமல் எந்நேரமும் இதில் மூழ்கியிருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. இந்நிலையில் வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (24) பெண் குரலில் பாடல்களை பாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை
அவரின் இந்தப் பதிவை பலரும் விமர்சித்துள்ளனர். தொடர்ந்து கலையரசனின் பாடல் மற்றும் நடிப்பை பெண்களோடு ஒப்பிட்டு விமர்சனம் எழுந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததால் கடந்த 12-ஆம் தேதி வியாசர்பாடி ரயில் நிலையத்தின் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கிண்டல்
இதுகுறித்து அவரது நண்பர்கள் கூறுகையில் தனது வீடியோவை பலரும் கிண்டல் செய்துள்ளதாக கலையரசன் எங்களிடம் வருந்தினார். எனினும் தன்னை பெண்ணாக நினைத்து கிண்டல், கேலி செய்தாலும், நான் தொடர்ந்து பெண் குரலில் பாடுவேன் என்று அவர் கூறியதாக தெரிவிக்கின்றனர். கலையரசனின் செல்போன் மட்டும் கிடைக்கவில்லை. மியூசிக்கலி ஆப் மூலம் பெண் குரலில் பாடல் பாடிய ஒருவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்த சம்பவம் ஓர் உயிரை பறித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications