சென்னையில் வெடித்த போராட்டம்.. சிஜேபிக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள் குண்டுக்கட்டாக கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சென்னையிலும் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் வரை போராடிய நிலையில், அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதற்கு முன்பாகவே போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Election Commission CJP BJP

அதேபோல் ஜந்தர் மந்தருக்கு யாரும் வரக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் நாடு முழுவதும் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று இளைஞர்கள் சிஜேபி கட்சிக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் போராட்டம் வெடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த நிலையில், போலீசார் 30 பேரை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அப்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள், இது பாஜக அரசா? இல்லை தவெக அரசா? என்று கோஷம் எழுப்பினர். இருப்பினும் போலீசார், இங்கு போராட அனுமதி இல்லை என்று கூறி கைது செய்து அருகில் இருந்த சமுதாய நலக்கூடத்தில் போலீசார் அடைத்திருக்கின்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிஜேபி ஆதரவாளர்கள், நாங்கள் அனுமதி கேட்ட போது போராட அனுமதி கொடுக்கவில்லை.. எங்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுகிறார்கள். இப்போது வந்து அனுமதி தருகிறோம் என்கிறார்கள். நான் இங்கு போராடுவது தொடர்பாக பெற்றோருக்கு தெரியாது. அவர்களுக்கு இதனைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+