சென்னையில் 8 மண்டலங்களில் எக்குத்தப்பாக எகிறிய கொரோனா.. ஷாக்கிங் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16585 ஆக உயர்ந்துள்ளது.மண்டல வாரியான பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 2ம் தேதி மாலை நிலவரப்படி 24586 ஆக உயர்ந்துள்ளது. .சென்னையில் மட்டும் 16585பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7805 பேர் குணம் அடைந்துள்ளனர். 135 பேர் மரணம் அடைந்துவிட்டனர். மீதமுள்ள 8506 பேர் பல்வேறு மருததுவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

chennai zone wise covid cases today

சென்னையில் உள்ள 15 மாவட்டங்களில் ராயபுரத்தில் உச்சபட்சமாக 3060 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கோடம்பாக்கம் தேனாம்பேட்டை மற்றும் திருவிக நகரில் 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அண்ணா நகரில் 1500ஐ நெருங்கி உள்ளது.

வளசரவாக்கம், அடையாறில் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி உள்ளது, அம்பத்தூர் திருவெற்றியூர் மண்டலத்தில பாதிப்பு 500ஐ கடந்துவிட்டது. மற்ற அனைத்து மண்டலங்களிலும் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 3ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

  • திருவெற்றியூர்: 559
  • மணலி: 228
  • மாதவரம் 400
  • தண்டையார் பேட்டை 2007
  • இராயபுரம் 3060
  • திருவிக நகர் 1711
  • அம்பத்தூர் 619
  • அண்ணா நகர் 1411
  • தேனாம்பேட்டை 1871
  • கோடம்பாக்கம் 1921
  • வளசரவாக்கம் 910
  • ஆலந்தூர் 243
  • அடையாறு 949
  • பெருங்குடி 278
  • சோழிங்கநல்லூர் 279

பிற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 139

எந்த மண்டலத்தில் எத்தனை பேர் குணம் அடைந்துள்ளனர் மற்றும் உயிரிழந்துள்ளனர், மருத்துவமனையில உள்ளார்கள் என்ற விவரத்தையும் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+