அண்ணாந்து பார்க்க போறீங்க.. சென்னையிலேயே மிகப்பெரிய மால்.. எங்கே வருது தெரியுமா? பின்னணி
சென்னை: பிரஸ்டீஜ் குழுமம் சென்னையில் உருவாக்கி வரும் ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் வணிக வளாகம் 2027-ல் பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெருங்குடியில், பழைய மகாபலிபுரம் சாலையில் (ஓஎம்ஆர்) அமைந்துள்ளது. இதற்கான சைட் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் வணிக வளாகம்
சுமார் 19.6 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாலில் 300 கடைகள் அமைக்கப்பட உள்ளன. ஹோட்டல்கள், அலுவலகங்கள் இதில் அமைக்கப்பட உள்ளன. நிறைவடையும்போது, இது சென்னையின் மிகப்பெரிய வணிக வளாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆங்கர் கடைகள், தியேட்டர்கள், உணவு வளாகங்கள் இங்கே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் வளாகத்தில் 1,781 இருக்கைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கம், 166 அறைகள் கொண்ட ஹோட்டல் மற்றும் 10.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் சில்லறை விற்பனைக் கடைகள் அமைய உள்ளன. அடித்தளத்தில் இரண்டு தளங்களில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. ஐந்து மாடிக் கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும். தரை தளம், முதல் தளம் மற்றும் மேல் தளங்களில் சில்லறை விற்பனை கடைகள் இருக்கும். திரையரங்கம் 2 மற்றும் 4-வது தளங்களில் அமைந்துள்ளது. ஹோட்டல்கள் 5-வது தளத்தில் இருக்கும்.
பிரஸ்டீஜ் குழுமம் 'ஃபோரம் மால்ஸ்' என்ற பெயரில் பல வணிக வளாகங்களை நடத்தி வருகிறது. மேலும், அடுத்த நான்கு ஆண்டுகளில் எட்டு புதிய வணிக வளாகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் ஓஎம்ஆர், பெருங்குடியில் அமையவுள்ள இந்த வணிக வளாகம் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபோரம் ஒன் மாலில் உள்ள வசதிகள்
இந்த வணிக வளாகத்தில் கீழ்க்கண்ட வசதிகள் இடம்பெறும்:
மருத்துவ உதவி
குழந்தைகள் உணவு அருந்தும் அறை
தொலைந்த பொருட்கள் மீட்பு சேவை
குழந்தைகள் உடை மாற்றும் அறை
சக்கர நாற்காலி
பைக் ஸ்பா
தொழுகை அறை
தகவல் மையம்
24 மணி நேர பாதுகாப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை
இலவச வைஃபை
பிரீமியம் பார்க்கிங்
ஷூக்கள் பழுது பார்க்கும் வசதி
முதல் உதவி
ஏடிஎம்
ஆம்புலன்ஸ்
ஃபோரம் மாலில் வெஸ்ட்ஸைடு, லைஃப்ஸ்டைல், ஆர்.எம்.கே.வி, வியா சவுத், ஃபேப் இந்தியா, ஸ்பார் ஹைப்பர் மார்க்கெட் போன்ற பல பிராண்டுகளின் கடைகள் இருக்கும்.
ஃபோரம் மால் சென்னையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் ஃபோரம் ஒன் சென்னை திறக்கப்படும் தேதி பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். திறப்புக்குப் பிறகு சென்னையின் மிகப்பெரிய வணிக வளாகமாக இது இருக்கும்.
ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் திறக்கப்பட்ட பிறகு, சென்னை நகரத்தின் வணிகச் சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலதரப்பட்ட வசதிகளுடன் இது ஒரு முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் வணிக மையமாக மாறும்.
இன்னொரு மால்
ஏற்கனவே சென்னை அசோக் நகரில் பெரிய மால் வர உள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் மிகப்பெரிய 22 அடுக்கு மாடி கட்டப்பட்டு வருகிறது . இடையில் நிறுத்தப்பட்டு இருந்த கட்டுமானம் மீண்டும் தொடங்கி உள்ளது. வேகமாக சென்று வரும் கட்டுமானம் தற்போது 17 மாடிகளை கடந்து கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னையின் இந்த பகுதியில் பிரம்மாண்ட மால் வர உள்ளது. இதை யார் காட்டுகிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகிடுவீர்கள். தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்தில் தற்போது 20 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. ட்வின் டவர் என்பதால் இன்னொரு டவரும் உடன் கட்டப்பட உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications