உலகின் சிறந்த ஃபிரைட் சிக்கன்! 3ம் இடத்தில் நம்ம சென்னை ஃபேமஸ் சிக்கன் 65! அப்போ முதலிடம் எது பாருங்க
சென்னை: உலகின் பல்வேறு நாடுகளிலும் வகை வகையாக சிக்கன் சமைக்கப்படுகிறது. குறிப்பாக பிரைட் சிக்கன் எனப்படும் வறுத்த கோழிக்கு உலகெங்கும் ரசிகர்கள் அதிகம். இதை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் சமைப்பார்கள். இதற்கிடையே பிரபல டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் உலகின் டாப் 10 ஃபிரைட் சிக்கன் உணவுகளை வெளியிட்டுள்ளது. அதில் நம்ம சிக்கன் 65 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் மக்கள் அதிகம் சாப்பிடும் இறைச்சிகளில் ஒன்றாக சிக்கன் இருக்கிறது. குறைந்த விலையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்து இதில் எளிதாகக் கிடைப்பதால் பலரும் சிக்கனை ஆர்வமாக வாங்கி சாப்பிடுகிறார்கள்.

குறிப்பாக ஃபிரைட் சிக்கன் எனப்படும் வறுத்த கோழிக்கு உலகெங்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பல்வேறு நாடுகளிலும் இவை பல வழிகளில் தயாரிக்கப்படுகின்றன. பாஸ்ட் ஃபுட் முதல் பல நாடுகளில் பாரம்பரிய உணவுகளாகக் கூட ஃபிரைட் சிக்கன் பரிமாறப்படுகிறது.
பெஸ்ட் ஃபிரைட் சிக்கன்: இதற்கிடையே பிரபல உணவு வழிகாட்டி நாளிதழான டேஸ்ட் அட்லஸ் என்ற அமைப்பு உலகின் சிறந்த ஃபிரைட் சிக்கன் குறித்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் பல்வேறு வகையான ஃபிரைட் சிக்கன் இருக்கும் நிலையில், அதில் சிறந்த டாப் 10 உணவுகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு ஃபிரைட் சிக்கன் மட்டுமே இடம்பிடித்துள்ளது. அதுதான் சிக்கன் 65. இது நமது சென்னையில் முதல்முதலாக தயாரிக்கப்பட்ட உணவு என்பது இதன் மற்றொரு சிறப்பாகும்.
சிக்கன் 65: சிக்கன் 65 என்பது இஞ்சி, எலுமிச்சை, சிவப்பு மிளகாய் மற்றும் பலவிதமான மசாலா கலந்து ஊறவைக்கப்பட்ட சிக்கனை டீப் பிரை செய்து செய்யப்படும் உணவு என்று டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது. 1960களில் சென்னையில் உள்ள பிரபல தனியார் உணவகம் தான் முதல்முறையாக சிக்கன் 65ஐ செய்து, தனது வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறியதாகச் சொல்லப்படுகிறது.
அதேநேரம் சிக்கன் 65 டேஸ்ட் அட்லஸ் இதழ் மூலம் இதுபோன்ற அங்கீகாரத்தைப் பெறுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் வெளியான லிஸ்டில் சிக்கன் 65 சிறந்த ஃபிரைட் சிக்கன் ஸிஸ்டில் 10வது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம் செலுத்தும் ஆசிய நாடுகள்: தற்போது வெளியாகியுள்ள இந்த லிஸ்டில் ஆசிய நாடுகளின் ஃபிரைட் சிக்கன் உணவு வகைகள் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. டாப் 10இல் 7 உணவுகளை ஆசிய நாடுகளைச் சேர்ந்தவையாகும். இரண்டு அமெரிக்காவில் இருந்தும், ஒன்று ஆசியாவில் இருந்தும் இருக்கிறது.
Learn more: https://t.co/FF09D35vmT pic.twitter.com/o0XhC6xpH4
— TasteAtlas (@TasteAtlas) December 1, 2024
முழு லிஸ்ட்: இந்த பட்டியலில் முதல் இடத்தில் சிக்கின் எனப்படும் கொரிய ஃபிரைட் சிக்கன் முதலிடத்திலும் ஜப்பானைச் சேர்ந்த கரேஜ் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தை தான் சென்னையில் முதலில் செய்யப்பட்ட சிக்கன் 65ஐ பிடித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் செய்யப்படும் ஃபிரைட் சிக்கன் 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தோனேசியாவின் அயாம் கோரெங் 5வது இடத்தைப் பிடித்துள்ளன.
தொடர்ந்து சீனாவின் ஜாஜிஜி, தைவான் நாட்டை சேர்ந்த பாப்கார்ன் சிக்கன், உக்ரைனின் சிக்கன் கியேவ் ஆகியவை 6 முதல் 8 இடங்களைப் பிடித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த அயம் பென்யேட் மற்றும் அமெரிக்காவின் ஆரஞ்சு சிக்கன் முறையே 9 மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications