Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் 17 மேம்பால பணிகள்.. ரெடியான சூப்பர் பாலம்.. மேயர் பிரியா சொன்ன குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் கண்ணாடி மேம்பாலத்துக்கான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், இன்னும் 3 மாத காலத்துக்குள் மக்களின் பயன்பாட்டுக்காக இப்பாலம் திறக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 206 குளம் மற்றும் ஏரிகள் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு முதற்கட்டமாக 32 குளங்கள் மற்றும் ஏரிகள், சென்னை ஸ்மார்ட்சிட்டி நிதியிலிருந்து புனரமைப்பு பணிகள் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டன. அதை தொடர்ந்து
ஸ்மாட்சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் - சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி ரூ.16 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது.

Chennais first glass suspension bridge will open in villivakkam just three months: mayor priya

வில்லிவாக்கத்தில் சிட்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய நீர்நிலையாகும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்துக்கு சொந்தமானது என்றாலும் இந்த ஏரி குடிநீருக்கு பயன்படுவது இல்லை. இந்த ஏரியை முறையாக புனரமைத்தால் வில்லிவாக்கம் பகுதியில் ஒரு பிரதான நீர் நிலையாக மாறும் என்றும், இதன் மூலம் வில்லிவாக்கம் பகுதி நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்று சென்னை மாநகராட்சி கணித்திருந்தது.

இந்த வில்லிவாக்கம் ஏரி கொள்ளளவை 20 ஆயிரம் கனமீட்டரில் இருந்து 70 ஆயிரம் கனமீட்டராக அதிகரிக்கவும், ஏரிக்கு கரைகள் அமைப்பது, டிவிஎஸ் கால்வாயை ஒட்டி ஒரு சாலை அமைப்பது, குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடை பயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், வேலி, திறந்தவெளி திரையரங்குகள் ஆகியவற்றை அமைப்பது, இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், மின்கழிப்பறை வசதி, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், குப்பைத் தொட்டிகள் அமைத்தல், ஏரிக் கரையை பாதுகாக்க நவீன முறைகளை பின்பற்றுதல் போன்ற சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கடந்த 2019ம் ஆண்டு அறிவித்தது.

அதன்படியே பல்வேறு பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை வில்லிவாக்கம் ஏரியில் நடந்து வந்தது. வில்லிவாக்கம் ஏரியின் நடுவில் நடந்து செல்லும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏரி தூர்வாரப்பட்டு நீர் நிறைந்துள்ளது. ஏரியில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முன்னதாக ஏரியின் ஆழம் ஒரு மீட்டராக மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணிக்கு பின்னர் சுமார் 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது. அதன் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வில்லிவாக்கம் ஏரியில் சென்னையின் முதல் கண்ணாடி தொங்கு பாலம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில், ரூ.8 கோடி செலவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னை தினத்தையொட்டி, சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சென்னையில செய்யப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து விவரித்து பேசினார். சாலையோர சுவர்களில் வண்ணமயமான சுவர் ஓவியங்கள், புதிதாக சாலைகள் அமைக்கும் போது, சாலை தடுப்பு மற்றும் நடைபாதைகளை அமைப்பது, பூங்காக்களில் செயற்கை நீரூற்றுகளை அமைப்பது. விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்துவது போன்ற பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அத்துடன் சென்னையில் நடைபெற்று வரும் 17 மேம்பாலப் பணிகள் குறித்தும் பேசினார். இந்த பணிகள் முடிவுற்ற பின் போக்குவரத்து நெரிசல் சென்னையில் வெகுவாக குறையும் என்று மேயர் பிரியா நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரம் சுரங்கப்பாதைகள் பெண்களுக்கு ஏற்ற வகையில் பாதுகாப்புடன் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் கண்ணாடி மேம்பாலத்துக்கான பணிகள் குறித்து பேசிய மேயர் பிரியா, தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும், இன்னும் 3 மாத காலத்துக்குள் மக்களின் பயன்பாட்டுக்காக இப்பாலம் திறந்து வைக்கப்படும் என்றும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+