"ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை.." சென்னையில் பிரதான பகுதியில் உள்ள தெருவின் பெயரை மாற்ற முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின். கிரிக்கெட் உலகில் பல புதுமைகளைக் கொண்டு வந்துள்ள அஸ்வின், பல சர்வதேச சாதனைகளைப் படைத்துள்ளார். இதற்கிடையே சென்னை கோடம்பாக்கத்தில் தெருவுக்கு 'ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை' எனப் பெயரிட மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் பலர் இடம்பிடித்தாலும், தங்கள் இடத்தை தக்கவைக்க அனைவராலும் முடிவதில்லை. இந்திய அணியில் தனது இடத்தை பல ஆண்டுகள் தக்கவைத்தது மட்டுமின்றி, பல உலக சாதனைகளையும் படைத்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஸ்பின் பவுலரான அஸ்வின் தனது விளையாட்டில் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளார்.

Chennai s Kodambakkid Road to be Renamed After Cricket Star Ravichandran Ashwin

அஸ்வின்

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக அஸ்வின் இருந்துள்ளார். பல போட்டிகளில் இந்தியா வெல்லவும் காரணமாக இருந்துள்ளார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கணிசமான பங்களிப்பை அஸ்வின் கொடுத்துள்ளார். இப்படி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளைப் படைத்த அஸ்வின் சமீபத்தில் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இதற்கிடையே அவரது சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகச் சென்னை கோடம்பாக்கத்தில் தெருவுக்கு 'ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை' எனப் பெயரிட மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு 'ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை' எனப் பெயர் சூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி

அதாவது சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ரூ.8,405 கோடியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும், பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இதில் இடம்பெற்றிருந்தது. இதற்கிடையே சென்னை பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இதற்கிடையே கோடம்பாக்கத்தில் ராமகிருஷ்ணாபுரம் 1வது தெருவிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை" எனப் பெயர் மாற்றம் செய்வதற்குத் தீர்மானம் நிறைவேற்றிட மாமன்றத்தின் முன் ஒப்புதலுக்காக அனுமதி வேண்டிச் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. கார்த்திக் என்பவர் அளித்த மனுவின் அடிப்படையில் இந்த தீர்மானம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

அஸ்வின் பெயரில் சாலை

அந்த மனுவில், "சென்னையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் விளையாட்டில் பல விருதுகளை வென்றுள்ளார். உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர் அஸ்வின். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். அவர் இந்தியாவுக்கு ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், ஆர்யா கவுடா சாலை அல்லது ராமகிருஷ்ணாபுரம் 1வது தெரு ஆகிய ஒரு தெருவிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

சென்னை மாநகராட்சி ஒப்புதல்

இதைக் கருத்தில் கொண்டு ராமகிருஷ்ணாபுரம் 1வது தெருவிற்கு "ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை" எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+