திடீர்னு விழுந்த பிரபல மாலின் மேற்கூரை.. அலறி ஓடிய மக்கள்.. சென்னையில் பரபரப்பு.. வெளியானது வீடியோ
விஆர் மால் மேற்கூரை இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது
சென்னை: விஆர் மாலின் மேற்கூரை தெர்மாகோல்கள், மழைநீரில் பொலபொலவென இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது.. நேற்றெல்லாம் மழை கொட்டி கொண்டே இருந்தது.. காலையில் இருந்து தூறல் விழுந்த நிலையில், மதியத்திற்கு மேல் மழையின் வேகம் அதிகரித்தது.. அதிலும் 3 மணிக்கு சென்னையே மிரண்டு போகும் அளவுக்கு வெளுத்து வாங்கியது.
இந்த திடீர் மழை யாருமே எதிர்பார்க்கவில்லை.. காரணம், டிசம்பர் 31, ஜனவரி 1, 2 தேதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றுதான் வானிலை தரப்பில் சொல்லப்பட்டிருந்தது..

மேக வெடிப்பு
இவ்வளவு மழையா என்று சென்னைவாசிகளே வியந்தனர்.. இது மேக வெடிப்பினால் பெய்த கனமழை என்றும் சொல்லப்பட்டது.. இதில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது... வாகனங்கள் மழைநீரில் சிக்கி கொண்டன.. பொதுமக்கள் தவித்து போயினர்.. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுதான் சாக்கு என்று கால் டாக்சிகளும், ஆட்டோ ஓட்டுனர்களும் கொள்ளை லாபம் பார்த்தனர்.

விஆர் மால்
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மாலில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து மழை நீர் உள்ளே புகுந்துவிட்டது.. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்... சென்னை அண்ணா நகரில் பிரபல விஆர் மால் இயங்கி வருகிறது.. இது 6 அடுக்குகள் கொண்ட பிரபலமான மால் ஆகும்.. இந்த மாலில் 250-க்கும் மேற்பட்ட கடைகள், 10 தியேட்டர்கள் உள்ளன.. எனவே, இந்த மாலிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.. இந்த மாலின் மேற்கூரை இரும்பு பைப்புகள் தாங்கி இருக்கக்கூடிய கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது..

காயம்
சென்னையில் பெய்த மழை காரணமாக, இந்த மாலின் ஃபால் சீலிங் திடீரென இடிந்து விழுந்தது... இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்... இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.. இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்... மேற்கூரை தெர்மாகோல்கள் இடிந்து விழும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..

மாடிகள்
அந்த வீடியோவில், மாலில் உள்ள மாடிகளிலும், கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக தென்படுகிறது.. அப்போதுதான் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென மேற்கூரை தெர்மாகோல் பெயர்ந்து விழுகிறது.. இதை பார்த்ததும் மக்கள் சிதறி ஓடுகிறார்கள்.. மேற்கூரை கீழே விழுந்ததும், அதில் இருந்து மழைநீர் கொட்டுகிறது.. அதாவது மேற்கூரையில் வழக்கமாக விழும் மழைநீரை வெளியேற்றுவதற்காக பைப் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.. இந்த பைப் வழியாகத்தான் தண்ணீர் எப்போதும் வெளியேறும்..

பைப்
ஆனால், இந்த பைப்பில் கசிவு ஏற்பட்டு, அதன்மூலம் ஏசி லைனில் அந்த மழைநீர்தண்ணீர் இறங்கி விட்டது.. அதனால், மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த தெர்மாகோல்கள் முற்றிலும் மழைநீரில் ஊறி விட்டது.. இறுதியில் ஒருகட்டத்துக்கு மேல் அந்த தெர்மாகோல்கள் உடைந்து சிதறி விழும்போது, தேங்கியிருந்த மழைநீரும் சேர்ந்து கொட்ட தொடங்கிவிட்டது.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications