இனிதான் ஆட்டமே.. சென்னையை "ஹைலைட்" செய்த வானிலை மையம்! 13 மாவட்டங்களில் மழை வாய்ப்பு - சூறாவளி வேற
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சென்னை விமான நிலையம் 16, தரமணி ARG (சென்னை), ஆலந்தூர் (சென்னை) தலா 14, செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) 13, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 11, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 10, மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), ACS மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), DGP அலுவலகம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் தலா 9, கொரட்டூர் (திருவள்ளூர்), MGR நகர் (சென்னை) தலா 8, KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) தலா 7, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), சென்னை கலெக்டர் அலுவலகம், வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 6, புழல் ARG (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பெரம்பூர் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 5, சோழிங்கநல்லூர் (சென்னை), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), மாதவரம் AWS (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) தலா 4, மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு), கடலூர் (கடலூர்), புவனகிரி (கடலூர்), ஆவடி (கடலூர்), திருவள்ளூர், எண்ணூர் AWS (திருவள்ளூர்), காஞ்சிபுரம், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 3, சிதம்பரம் AWS (கடலூர்), காரைக்கால், விழுப்புரம், முகையூர் (விழுப்புரம்), கொத்தவாச்சேரி (கடலூர்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), சிதம்பரம் (கடலூர்), திருப்போரூர் செங்கல்பட்டு), கோலியனூர் (விழுப்புரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஆனந்தபுரம் (விழுப்புரம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), சூரப்பட்டு (விழுப்புரம்), நெமூர் (விழுப்புரம்), புதுச்சேரி, செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), கேதர் (விழுப்புரம்), சேத்பேட்டை (திருவண்ணாமலை), வானமாதேவி (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), கஞ்சனூர் (விழுப்புரம்), வேப்பூர் (கடலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), செஞ்சி (வில்லிபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 2, வானூர் (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்), வல்லம் (விழுப்புரம்), செங்கல்பட்டு, திருவள்ளூர் (திருவள்ளூர்), திருவண்ணாமலை, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), திருத்தணி PTO (திருவள்ளூர்), சேத்தியாதோப்பு (கடலூர்), மயிலாடுதுறை வடகுத்து (கடலூர்), திருப்பூர் KVK AWS (திருவள்ளூர்), நாகப்பட்டினம், பொன்னேரி (திருவள்ளூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), அரசூர் (விழுப்புரம்), கச்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), மணம்பூண்டி (விழுப்புரம்)), வளவனூர் (விழுப்புரம்), திருவாரூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), அரியலூர், வளத்தி (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), நன்னிலம் (திருவாரூர்), பெலாந்துறை (கடலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), தேவாலா (நீலகிரி), வந்தவாசி (திருவண்ணாமலை), மீ மாத்தூர் (கடலூர்), அவலூர்பேட்டை (விழுப்புரம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடதமிழக - தென்ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21.06.2023 முதல் 23.06.2023 வரை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23.06.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications