Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சதுரங்க மேதை தமிழமுதன், 2000 Elo ரேட்டிங் புள்ளிகளைக் கடந்த உலகின் மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். செஸ் உலகில் 9 வயதிலேயே 2000 Elo புள்ளிகளைக் கடப்பது அரிய சாதனை. உலகளவில், 9 வயதுக்குட்பட்ட வீரர்களில் இப்புள்ளிகளைக் கடந்தவர் தமிழமுதன் மட்டுமே.

தன்னுடைய 4ம் வயதில் செஸ் கற்றுக்கொண்ட தமிழமுதன், உறவினர்கள் மூலம் விளையாட்டை அறிந்தார். செஸ் போர்டு குறித்த உள்ளார்ந்த புரிதலை வெகு விரைவிலேயே வெளிப்படுத்தினார்.

Chess

யார் இந்த தமிழமுதன்?

கள்ளக்குறிச்சி பேருந்து ஓட்டுநரும், பகுதிநேர செஸ் பயிற்சியாளருமான ரவிச்சந்திரன், தமிழமுதன் திறமையை முதலில் கண்டறிந்தார். மாவட்டப் போட்டியில், பயிற்சி இன்றி, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக 5க்கு 3 புள்ளிகள் எடுத்தார். இது ஒரு அட்டகாசமான மேட்ச். தமிழமுதனின் மூவ் ஒவ்வொன்றும் கச்சிதமாக இருந்தது. இதை பார்த்து ஆச்சரியப்பட்ட ரவிச்சந்திரன், தமிழமுதனுக்கு இலவசப் பயிற்சி அளித்தார்.

முதல் வெற்றி

அப்போது தமிழமுதனுக்கு 6 வயது இருக்கும். மாநில அளவிலான 9 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான செஸ் போட்டியில், 9க்கு 9 என முழுமையான வெற்றியை பெற்றார். இந்த முதல் வெற்றி கோப்பையை, உறவினர்களுக்கும், தாத்தா பாட்டிக்கும் தமிழமுதன் அர்ப்பணித்தார். வெற்றி எல்லாம் ஓகேதான். இது சினமா இல்லை, தொடர்ந்து வெற்றி பெற.. நிச்சயம் முறையான பயிற்சி அவசியம் என்பதை குடும்பத்தினர் உணர்ந்தனர்.

இப்படித்தான் ஹட்சன் செஸ் அகாடமியில் சேர்க்கப்பட்டார் தமிழமுதன். அகாடமியில் சேர்ந்தது தமிழமுதன் பயணத்தில் திருப்புமுனை. அங்கு கிடைத்த பயிற்சியால், ஆட்டத் திறன், குறிப்பாக வேகமான செஸ் வடிவங்களில் நம்பிக்கையும், வேகமும் கணிசமாக மேம்பட்டன.

அரிதான சாதனை

அகாடமி பயிற்சிக்கு பின், தமிழமுதனின் Elo ரேட்டிங் வேகமாக உயர்ந்தது. 8 வயதிலேயே 2000 Elo புள்ளிகளைக் கடந்த உலகின் இளவயது வீரரானார். 'கேண்டிடேட் மாஸ்டர்' பட்டம் வென்றவர், 2026 பிப்ரவரிக்குள் 9 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். ஒரே மாதத்தில் 350க்கும் மேற்பட்ட எலோ புள்ளிகளைக் குவித்தது அரிதான சாதனை.

Elo புள்ளிகள் என்றால் என்ன?

கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் எவ்வளவு ரன்களை குவித்தார் என்பதை வைத்துதான் அவருக்கு மதிப்பு இருக்கும். அதுபோல செஸ் விளையாட்டில் Elo புள்ளிகள் ஒரு வீரரின் தரம் மற்றும் திறமையின் அளவீடாக பார்க்கப்படுகிறது. 1000-1200 Elo புள்ளிகள் பெற்றிருக்கிறார் எனில், அவர் தொடக்க நிலை வீரர். அதுவே அவர் 2000 புள்ளிகளை பெற்றவர் எனில், அவர் நிபுணராகவே பார்க்கப்படுவார். அதிலும் 9 வயதில் 2000 புள்ளிகள் எனில், அதுதான் கெத்து.

அசத்தலான மேட்ச்

இப்படியாக வளர்ந்த தமிழமுதன், சர்வதேச அளவிலும் முத்திரையைப் பதித்தார். 2025ல் ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஈர்க்கக்கூடிய செயல்திறனுடன் 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். 'கிழக்கின் ஏதென்ஸ்' போட்டியில் 9க்கு 8.5 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். அபார செயல்திறனுக்காக, 9 வயது தமிழமுதனுக்கு மாருதி சுசுகி கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது. இது மறக்க முடியாத தருணம்.

அப்போது தமிழமுதனின் ரேட்டிங் 1683 ஆக இருந்தாலும், 2077 என்ற பிரமிக்க வைக்கும் செயல்திறன் ரேட்டிங்கைப் பதிவு செய்தார். இச்சாதனைக்காகவே அவருக்கு மாருதி சுசுகி கார் கிடைத்தது.

குடும்ப பின்னணி

தமிழமுதனின் சாதனைகளுக்கு குடும்ப ஆதரவு மிக முக்கியம். செஸ் வாழ்க்கைக்கு அவர்கள் குறிப்பிடத்தக்கத் தியாகங்கள் செய்தனர். தந்தை முதல் தலைமுறை அரசு அதிகாரி (குரூப் பி), விவசாயப் பின்னணி கொண்டவர். தாய் இல்லத்தரசி.

பயிற்சித் தேவைகள் அதிகரிக்கவே, குடும்பத்தினர் துணிச்சலான முடிவெடுத்தனர். தமிழமுதன் தொடர்ந்து பயிற்சி பெற, தாய் சுமார் 350 கி.மீ. தொலைவுக்கு இடம்பெயர்ந்து அவருடன் தங்கினார். தந்தை மகள் உதிஷாவுடன் வீட்டில் தங்கினார். பத்து வயது உதிஷாவும் அண்ணனின் செஸ் பயணத்திற்கு ஆதரவளிக்கும் பக்குவத்தை வெளிப்படுத்தியது பிரமிப்புக்குரியது.

நிதியுதவி

பல இளம் திறமைகளின் பெற்றோர்களைப் போலவே, தமிழமுதனின் பெற்றோரும் நிதிச் சவால்களை எதிர்கொண்டனர். நிதி நெருக்கடிகளால், அவர் சில தேசிய, சர்வதேசப் போட்டிகளைத் தவறவிட்டார். காமன்வெல்த், மேற்கு ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்குப் பதக்கங்கள் வெல்ல தமிழமுதனுக்கு வாய்ப்புகள் இருந்ததாக தந்தை நம்புகிறார்.

தமிழமுதன் செஸ் பயணத்தைத் தொடர நிதி உதவி அல்லது ஸ்பான்சர்ஷிப் பெரிதும் உதவும். பயணம், தங்குமிடம், நுழைவுக் கட்டணம், உபகரணங்களுக்கான பெரும் செலவுகள் குறித்து பெற்றோருக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. "முன்பே தெரிந்திருந்தால், நாங்கள் இந்தத் துறையைத் தவிர்த்திருப்போம்" என்று தந்தை கனத்த மனதுடன் ஒப்புக்கொண்டார்.

தமிழமுதனின் செஸ் பயணம் ஊக்கமளிப்பதுடன், சிந்தனைகளையும் தூண்டுகிறது. இளம் வயதிலேயே நம்ப முடியாத திறமையை வெளிப்படுத்துகிறது. ஆனால், பல வளரும் வீரர்கள் நிதிச் சவால்களுடன் போராடுகின்றனர். சரியான ஆதரவுடன், தமிழமுதனைப் போன்றவர்களின் பயணம் சிறந்த வெற்றிக் கதையாக மாறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+