மாற்றுக்கட்சி தொகுதியிலும் மாற்றம்! - செய்யூரில் முதல்வர் ஸ்டாலின் செய்த மாற்றங்கள்
சென்னை: திமுக ஆட்சியில் மின்வெட்டு எனப் பொய்யான பிரச்சாரத்தை முன்வைத்து பலரும் அரசியல் செய்வது வழக்கம். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 'மின்மிகை மாநிலம்' என்று கோஷம் போட்டார்களோ ஒழிய, சரிந்துகிடந்த மின்துறையை உயர்த்தி நிறுத்த ஒரு பணியையும் மேற்கொள்ளவில்லை.

தனியாரிடம் இருந்து மின்சாரத்தை அதிக விலைக்குக் கொள்முதல் செய்து, பொய்யான தோற்றதைக் கட்டமைத்து வருகிறார்கள் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தொடர்ந்து கூறிவந்தது.
ஆகவேதான் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அதிக நிதிச் சுமையைத் தாங்கிக் கொள்ள நேர்ந்தது. அதன் விளைவாக ஒன்றிய அரசின் அழுத்தத்தால் மின் கட்டணத்தை உயர்த்தியே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இன்று மின் கட்டண உயர்வை வைத்து அரசியல் செய்பவர்கள் இந்த ஆட்சியில் மீண்டுவரும் மின் துறையைப் பற்றிப் பேசுவதே இல்லை. பல கோடி ரூபாய் பொருமானம் உள்ள உபகரணங்களை இந்த அரசு புதியதாகத் தொகுதிவாரியாகப் புதுப்பித்து வருகிறது.
அப்படி மின் சேவையில் தன்னிறைவைப் பெற்றுள்ள பல தொகுதிகளை நாம் தொடர்ந்து எழுதிவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது இணைந்துள்ளது செய்யூர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது செய்யூர் தொகுதி. அதிகமான கிராமப் பகுதிகளைக் கொண்ட தொகுதி.

திரும்பும் திசை எல்லாம் நெல்வயல்கள் நிறைந்த பூமி. ஆகவே பசுமைக்குச் செழுமைக்கும் குறையில்லாத பகுதி. கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி உள்ள பல கடற்கரை கிராமங்கள் இந்தத் தொகுதிக்குள்தான் வருகின்றன. இதன் சட்டமன்ற உறுப்பினராக தற்போது விசிகவை சேர்ந்த பனையூர் பாபு பதவி வகித்து வருகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் தொகுதி மின் தேவைகளில் பலபடிகள் முன்னேறி இருக்கிறது.

"தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதற்கட்டமாக 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்கினார். அதில் இந்தத் தொகுதிக்கு மட்டும் முதலில் 122 மின் இணைப்புகள் கிடைத்தன. அடுத்த கட்டமாக 50 ஆயிரம் வழங்கினார். அப்போது எங்கள் பகுதிக்கு 128 இணைப்புகள் கிடைத்தன. அப்படி இலவச மின் இணைப்புகள் வரப்போவதை முன்கூட்டியே உணர்ந்து குறைந்த அழுத்த மின்சார பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக 3 டிரான்ஸ்ஃபார்மர்களை மூன்று ஊர்களில் மாற்றி அமைத்திருந்தோம்.
இந்தப் பகுதியில் விவசாயிகள் அதிகம் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு மின்சாரம் தடை இல்லாமல் வழங்க வேண்டும். அதனால், மாதம் ஒருமுறை முன்கூட்டியே நாளிதழ்களில் பராமரிப்பு பணிக்காக ஒருநாள் மின் சேவையை நிறுத்துவோம். அன்று தான் அனைத்து மின் உபகரணம் சார்ந்த பொருள்களை ஆய்வு செய்து அதனை உடனடியாக மாற்றுவோம்.

ஆயில் மாற்றுவது. வயர் மாற்றுவது. மின் இணைப்பு உபகரணங்களை மாற்றுவது. மின் இணைப்பைத் தடை செய்யும் விதமாக உள்ள மரங்களை வெட்டி அகற்றுவது என அனைத்து மராமத்து வேலைகளையும் ஒரே நாளில் முடித்துவிடுவோம். அதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எங்கள் பகுதியில் மின் தடையே இல்லை" என்கிறார் இப்பகுதி உதவிப் பொறியாளர்.
"இந்த அச்சரப்பாக்கம் கோட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 212 மின்மாற்றிகளை புதியதாக மாற்றி அமைத்துள்ளோம். கீழ் மருவத்தூர் பகுதியில் பல காலமாகக் குறைந்த மின் அழுத்தம் பிரச்சினை இருந்துவந்தது. அதை ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் இந்தப் புதிய அரசு கள ஆய்வு செய்து மாற்றித் தந்துள்ளது.
அதேபோல பல மின் கம்பங்கள் சேதமடைந்திருந்தன. அதனை ஆய்வு செய்து இதுவரை 20 கம்பங்களை மாற்றி அமைத்துள்ளோம்.

சில பகுதிகளில் மின் பளு பற்றாக்குறை நிலவி வந்ததையும் கள ஆய்வு செய்து முற்றிலும் சரிசெய்து தந்துள்ளோம். 25 கேவி உள்ள 2 மின்மாற்றிகளை 65 கேவி ஆக தரம் உயர்த்தி புதியதாக மாற்றி அமைத்துள்ளோம்.
இந்தப் குதியில் புதியதாக மாற்றப்பட்டுள்ள மின் கம்பங்களால் மனநிம்மதி அடைந்துள்ளதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். முன்பு மழைக்காலங்களில் அச்சத்துடன் வாழ்ந்துவந்ததாகவும் தற்போது அந்த நிலை முற்றிலும் அகன்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு பேசுகையில், ":இந்த அரசு விவசாயிகள் மீது அக்கறை கொண்ட அரசு. அவர்களின் நலன் மீது அக்கறை கொண்ட அரசு. ஆகவேதான் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் வேளாண் குடிகளுக்கு என்று தனி பட்ஜெட்டை போட்டு, புதிய பாதையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்திக் காட்டினார்.
இந்தத் தொகுதிக்கு விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் மூலம் 262 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அரசு செய்துள்ள செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா? 3 கோடியே 20 லட்சம் ரூபாய். இவை ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தின் போது வழங்கப்பட்டவை.
இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் இணைப்புகள் வழங்க ஆணை பிறப்பித்தபோது எங்கள் தொகுதிக்கு 228 இணைப்புகள் கிடைத்தன. அதற்கான மொத்த செலவு 2 கோடியோ 10 லட்ச ரூபாய் ஆகும்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு 501 மின் கம்பங்களை எங்கள் தொகுதியில் புதியதாக மாற்றி அமைத்துள்ளோம். இதுவரை 152 மின்மாற்றிகளை புதியதாக அமைத்துள்ளோம். மின்னகம் மூலம் எங்கள் தொகுதியில் 620 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இத்தனை புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சரி செய்துள்ளோம்.
மேலும் 40 கி.மீட்டர் தூரம் வரை புதிய மின் பாதையை அமைத்துத் தந்துள்ளோம். 11 கிலோ வாட் திறன் கொண்ட மின்நிலையம் அமைத்துள்ளோம். இந்தத் தொகுதி கடற்கரை பகுதி. கடந்த மாண்டாஸ் புயலில் கடுமையாக மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.
அத்தனை கம்பங்களையும் 2 நாள்களில் சரிசெய்து கொடுத்தோம். முன்பு எல்லாம் ஒரு புயல் பாதிப்பிலிருந்து மீள, சுமார் பத்து நாள்கள் ஆகும். அந்தத் தாமதத்தை முற்றிலும் குறைத்துள்ளோம்.
தொண்டமானூர் கிராமத்திற்கு நான் கள ஆய்வுக்குச் சென்ற போது ஒரு பகுதியில் மட்டும் மின்சார இணைப்பே இல்லை என்பதை அறிந்தேன். உடனடியாக 25 மின் கம்பங்களைப் போட்டு அனைத்து வீட்டுக்கும் மின் சேவை வழங்கினோம்.

இத்தனை வசதிகளையும் முதல்வர் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளார். கூட்டணிக் கட்சி தொகுதிதானே என்று நினைக்காமல் உடனடியாக அனைத்து உபகரணங்களையும் கொடுத்து என் தொகுதிக்கு புதிய ஒளியைப் பாய்ச்சி உள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி" என்கிறார்.
இந்த ஆட்சிக்காலத்தில் இத்தொகுதியில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் சுமார் 300 மீட்டர்களை புதியதாக மாற்றி உள்ளதாக ஒரு ஊழியர் கூறுகிறார். 2022 இல் மாண்டாஸ் புயலில் போது மின்சாரம் இல்லை என ஒருவர் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார். அந்தப் பதிவைப் பார்த்து அடுத்த நாளே மின் சேவை வழங்கப்பட்டதற்காக ஒரு இளைஞர் நன்றி தெரிவிக்கிறார் நம்மிடம்.

மேலும் மேல் மருத்துவர் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவர் தங்கள் பகுதியில் மின் பளு குறைவாக இருந்தது என்றும் அதனை இந்த ஆட்சிக்காலத்தில்தான் சரிசெய்து கொடுத்தார்கள் என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.
செய்யூர் தொகுதியில் மட்டும் மொத்தம் தலா நான்கு 110 கேவி துணைமின் நிலையங்களும் 33 கேவி துணை மின்நிலையங்கள் உள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1215 மின்மாற்றிகள் உள்ளன. அதில் ஆய்வு செய்ததில் கூடுதலாக 512 மின்மாற்றிகளை புதியதாக அமைத்துள்ளனர். ஆகவே மின் அழுத்தம் சார்ந்த பிரச்சினை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் மண்டல பெண் அதிகாரி ஒருவர்.
-
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications