"என்னது.. சிக்கன் பிரியாணி 30 ரூபாயா.. 90ஸ் வாழ்க்கையே தனிதான்".. 2k கிட்ஸ்களை ஏங்க வைத்த மெனுகார்டு
பிறந்ததில் இருந்தே காஸ்ட்லியான வாழ்க்கை முறைக்கு அறிமுகமானவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட 2k கிட்ஸ்கள் கையில் கண்களில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய மெனுகார்டு மாட்டினால் கண்களில் நீர் வரத்தானே செய்யும்..
சென்னை: வயிறு பசி கிள்ளிக்கொண்டிருக்கும் போது சிக்கன் பிரியாணி 30 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 32 ரூபாய்க்கும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு மெனுகார்டை பார்த்துதான் நம் 2k கிட்ஸ்கள் சப்புக்கொட்டி வருகிறார்கள்.
ஆனால் என்ன செய்வது அது இன்றைய மெனு கார்டு இல்லையே. 2000-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ஹோட்டலின் மெனுகார்டுதான் அது.
இப்போது இந்த விலையில் சிக்கன் பிரியாணியை விடுங்கள். ஒரு தயிர் சாதத்தை கூட எதிர்பார்க்க முடியுமா? தற்போது இந்த மெனுகார்டை வைத்துதான், சமூக வலைதளங்களில் 90ஸ் கிட்ஸ்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் என 2k கிட்ஸ்கள் அநியாயத்துக்கு புலம்பி வருகிறார்கள்.

மாற்றங்களின் சாட்சி 90ஸ் கிட்ஸ்
இந்திய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் 90-களில் பிறந்தவர்கள் பிரத்யேகமானவர்கள் என்ற உண்மை தெரியவரும். ஏனெனில் சமூகம், பொருளாதாரம், அறிவியல் என அனைத்து தளங்களிலும் ஏற்பட்ட (ஏற்பட்டு வரும்) மாற்றங்களை பார்த்தவர்களும், அனுபவித்தவர்களும் 90ஸ் கிட்ஸ்கள்தான். செல்போன், டிவி, டெக், விசிஆர் என இதை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று ஒரு பெரிய ரெஸ்டாரண்ட்டில் சராசரியாக ரூ.2,500 கொடுத்து குடும்பத்துடன் சாப்பிடும் இதே 90ஸ் கிட்ஸ்கள், இதைவிட சுவை மிகுந்த உணவை வெறும் 150 ரூபாய்க்கு சாப்பிட்டிருக்கிறார்கள்.

உலா வரும் மெனு கார்டு
ஆனால், 2k கிட்ஸ்கள் அப்படி அல்ல. பிறந்ததில் இருந்தே காஸ்ட்லியான வாழ்க்கை முறைக்கு அறிமுகமானவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட 2k கிட்ஸ்கள் கையில் கண்களில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய மெனுகார்டு மாட்டினால் கண்களில் நீர் வரத்தானே செய்யும்.. அப்படியொரு புகைப்படம்தான் இன்று ட்விட்டரில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. 2001-ம் ஆண்டு அச்சிடப்பட்டிருக்கும் அந்த மெனுகார்டு எந்த நகரத்தை சேர்ந்த ஓட்டலுக்கு உரியது எனத் தெரியவில்லை. அதில் இருக்கும் உணவை விட அவற்றின் விலைதான் இன்றைய இளைஞர்களால் நம்பவே முடியவில்லை.

வாயை பிளந்த 2k கிட்ஸ்
அசைவ ஓட்டல் மெனுகார்டான அதில், ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.30 என இருக்கிறது. இதற்கே வாயை பிளந்தால் எப்படி? மட்டன் பிரியாணியின் விலை ரூ.32 தான். அதாவது, இன்றைய விலையை விட சுமார் 7 மடங்கு குறைவாக அன்றைக்கு இந்த உணவுகள் விற்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஃபிஷ் ப்ரை - ரூ.10, பன்னீர் பட்டர் மசாலா ரூ.24, மட்டன் சுக்கா ரூ.25 என அதில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

அலறவிடும் கமெண்ட்டுகள்
இதை பார்த்த 2k கிட்ஸ்கள் ஏக்கமும், நகைச்சுவையுமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒருவர் தனது கமெண்ட்டில், "90ஸ் கிட்ஸ் வாழ்க்கையே தனிதான்.. வறுமையிலும் மகிழ்ச்சியாக இருந்த தலைமுறை அவர்கள்தான்" எனக் கூறியிருக்கிறார். "உணவுக்கு ஏற்ற விலை அன்றைய ஓட்டல்கள் வாங்கியிருக்கின்றன; இன்றோ ஓட்டல்களுக்கு தேவைப்படும் விலையை அவர்கள் கேட்கிறார்கள்" என இன்னொருவர் கூறியுள்ளார். அதேபோல, "டைம் டிராவல் மிஷின் கிடைத்தால் நிச்சயம் நான் 90-களுக்கு தான் செல்வேன்" என ஒருவர் கூறுகிறார். மற்றொருவரோ, 10 நாட்கள் மட்டும் 90-களில் வாழ்ந்தால் போதும். பிறவிப்பயனை அடைந்துவிடுவேன்" என வரிசையாக இன்றைய தலைமுறையினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications