சிக்கனுக்கு சிக்கல்.. எடை பிரச்சினையால் பூட்டப்படும் கடை! பல கோடி லாஸ் ஆகப் போகுது! முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 31ஆம் தேதியான நாளை முதல் கறிக்கோழிகள் சில்லறை விற்பனை செய்யப்படாது எனவும், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக கறிக்கோழி விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்படாது என பல்வேறு மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வியாபாரிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. குறிப்பாக ஹோட்டல் தொழில் முடங்கும் அபாயம் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் ஹோட்டல் உரிமையாளர்கள்.

தமிழக முழுவதும் அரசின் வழிகாட்டுதலின்படி கறிக்கோழி விற்பனைக்கு ஏற்றுமதி செய்யும் முன் 15 மணி நேரத்திற்கு முன்பாக கறிக்கோழி உணவு தீவனம் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது கறிக்கோழி விற்பனை செய்யப்படும் போது தீவனமும் குடிநீரும் கொடுப்பதால் கறி கோழி 200 கிராம் வரை கூடுதல் எடை ஏற்பட்டு சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்கின்றனர்.

Chicken Tamil Nadu Strike

ஒவ்வொரு கோழிக்கும் 30 லிருந்து 40 ரூபாய் ஒட்டுமொத்த கறிக்கோழி உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்தியாளர்களுக்கே சென்று விடுவதால் கறிக்கோழிகளை வாங்கி விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு ஏராளமான நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் வருகின்ற 31அம் தேதி அதாவது நாளை முதல் கறிக்கோழி வியாபாரிகள் காலவரையற்ற கறிக்கோழி விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கின்றனர்.

மேலும் சில்லரை விற்பனை கடைகளுக்கும் 31ஆம் தேதி முதல் சப்ளை இருக்காது என கூறுகின்றனர். இதை அடுத்து சென்னை, திருவண்ணாமலை, வேலூர் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் வியாபாரிகள் 31ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். விற்பனை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் மட்டுமல்லாது லாரி ஓட்டுநர்கள் சுமை தூக்குபவர்கள் கறிக்கோழி கடைகளில் வேலை செய்பவர்கள், ஹோட்டல், சிக்கன் 65 மற்றும் பல்வேறு தளங்களில் இருக்கும் வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. ஒரு நாளைக்கு தமிழகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான டன் சிக்கன் நுகர்வு செய்யப்படுகிறது.

தற்போது சப்ளை பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகமும் வருமான இழப்பும் ஏற்படுவதாக சொல்லும் வியாபாரிகள், தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+