சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல்.. அனுமதியின்றி கட்டடங்கள் ஆய்வு செய்ய குழு அமைத்த அறநிலையத்துறை
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என அறநிலையத்துறை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 6 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். இந்த கோயிலில் 4 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் நந்தவனங்கள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இது வரலாற்று சிறப்புமிக்க கோவில் தொல்லியல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலானது தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் அனுமதியின்றி நந்தவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் அனுமதியின்றி 100 அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி கோவில் தீட்சிதரான நடராஜ் தீட்சிதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் நந்தவனங்கள் அமைப்பதற்காக 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் அதனால் புது திட்சிதர்கள் குழுவால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா? என ஆய்வு செய்து இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நீதிபதிகள் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பிலும் தமிழ்நாடு தொல்லியல்துறை தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கோயிலில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை தர 6 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். இது பொதுக்கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமல்ல. தீட்சிதர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோயிலை நிர்வகித்து வரலாம் நிர்வாகத்தில் தவறுகள் ஏதேனும் நடைபெற்றால் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications