சொந்த தொகுதி.. கொளத்தூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. ஏராளமான நிலத் திட்ட உதவிகள்
சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.111.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 840 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். அண்மையில் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிலையில் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியில் நலத்தட்ட உதவிகள் வழங்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் கெளதரமபுரத்தில் ரூ.111.80 கோடியில் கட்டப்பட்ட 840 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை இன்று திறந்து வைக்கிறார்.
அதன்பின்னர் மாலை 4 மணியளவில் மறுகட்டுமான திட்டக் குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்க உள்ளார். இதில் பல்வேறு அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர். கடந்த முறை கொளத்தூர் தொகுதிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பேசிய போது, தமிழக அரசின் இலவச திட்டங்கள் தொடரும் என்றும், அவை சமூக நீதி திட்டங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications