புஸ்சிக்கு ஸ்வீட்.. செங்கோட்டையன் தோளை பிடித்து சீட்டில் உட்கார வைத்த விஜய்.. கோட்டையில் சுவாரசியம்
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்கள் தங்களது துறை அலுவலகங்களில் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அப்போது நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செங்கோட்டையன் அறைக்கு சென்ற முதல்வர் விஜய், அவரை தோளை பிடித்து இருக்கையில் உட்கார வைத்தார். 6வது முறையாக அமைச்சராகியுள்ள செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இதேபோல் ஊரக வளர்ச்சி, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் அறைக்கு சென்ற முதல்வர் விஜய், அவரையும் இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். அப்போது அவர் விஜய்க்கு ஸ்வீட் வழங்கி ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் கோட்டையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செங்கோட்டையன் தோளை பிடித்து..
தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வென்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தவெக பிடித்துள்ளது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். கடந்த 10 ஆம் தேதி விஜய் பதவியேற்ற நிலையில், ஒரு வாரம் கழித்து நேற்று முன் தினம் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கப்பட்டது.

இலாகா ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று தங்கள் துறை அலுவலகங்களில் பொறுப்பேற்றுக்கொண்டனர். அமைச்சராக பொறுப்பேற்ற செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த் ஆகியோரின் அறைக்கே சென்ற முதல்வர் விஜய், அவர்களை இருக்கையில் அமர்த்தி அழகு பார்த்தார். நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற செங்கோட்டையன் அறைக்கு சென்ற முதல்வர் விஜய், அவரை தோளை பிடித்து இருக்கையில் உட்கார வைத்தார்.
செங்கோட்டையன் நெகிழ்ச்சி
செங்கோட்டையனும் நெகிழ்ச்சியுடன் அந்த இருக்கையில் அமர்ந்தார். தொடர்ந்து பூங்கொத்து கொடுத்த விஜய், அவருக்கு வாழ்த்தையும் தெரிவித்தார். பின்னர் செங்கொட்டையன் விஜய்க்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்தார். இந்த நிகழ்வின்போது செங்கொட்டையன் நெகிழ்ச்சியாக இருந்ததை காண முடிந்தது.
ஏற்கனவே 5 முறையாக அமைச்சராக இருந்துள்ள செங்கோட்டையன் தற்போது 6வது முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
புஸ்சி ஆனந்தை வாழ்த்திய விஜய்

அதேபோல, ஊரக வளர்ச்சி, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் அறைக்கு சென்ற முதல்வர் விஜய், அவரையும் இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். உடனே புஸ்சி ஆனந்த், தான் கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்சை விஜய் முன்பாக நீட்டினார். விஜய்யும் ஸ்வீட்டை எடுத்து, புஸ்சி ஆனந்த் வாயில் ஊட்டிவிட்டார். பின்னர் தனது இருக்கையில் அமர்ந்த புஸ்சி ஆனந்த கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
அண்ணாமலையாரின் தீவிர பக்தரான புஸ்சி ஆனந்த் கையெழுத்திடும் போது பக்கத்திலேயே அண்ணாமலையர் படத்தை வைத்துக்கொண்டு கையெழுத்திட்டார். முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்ற நிலையில் அமைச்சர்கள் உடனடியாக தங்கள் துறைசார்ந்த பணிகளை தொடங்கினர். துறையின் அதிகாரிகளை உடனடியாக அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
புத்தகம் கொடுத்த அருண்ராஜ்
அதேபோல மருத்துவத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அருண் ராஜ்ஜும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். சால்வையை கொடுக்காமல் புத்தகத்தை வழங்கி விஜய்யிடம் அருண் ராஜ் வாழ்த்து பெற்றார். முன்னதாக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக கோட்டைக்கு வந்த போது, செங்கோட்டையனே அவரை அழைத்து வந்தார். முதல்வரின் அறைக்கு அழைத்து வந்த செங்கோட்டையன் விஜய்யை முதல்வர் இருக்கையில் அமருமாறு கூறிய வீடியோக்களும் இணையத்தில் டிரெண்ட் ஆகி இருந்தது.
-
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications